Published : 15 Jun 2015 10:29 AM
Last Updated : 15 Jun 2015 10:29 AM

பெற்றோர்களின் கவலையைப் போக்கும் கல்விக்கடன்

ஜூன் மாதம் தொடங்கிவிட் டால் பள்ளி செல்லும் பிள்ளைகள் உள்ள வீடு களில் பரபரப்புக்கு பஞ்சமிருக் காது. மாத பட்ஜெட்டில் துண்டுவிழும் மாதமும் இதுதான். காரணம் கல்விச் செலவுகள். அது வும் கல்லூரியில் சேர்க்க வேண் டிய பிள்ளைகளாக இருந்தால் சொல்லவே வேண்டாம்...

கல்வி செலவுக்கென பணம் சேர்த்தவர்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் பணம் சேர்க்காதவர்கள்....? அவர்களும் கவலைப்பட தேவையில்லை என நம்பிக்கை தருகின்றன வங்கிகள் அளிக்கும் கல்விக்கடன்கள். பொதுத்துறை மற்றும் சில தனியார் வங்கிகளில் கிடைக்கும் இந்த வசதியை உங்கள் வாரிசுகளுக்கு அளித்து அவர்களது கல்விக் கனவுகளை நிறைவேற்றலாம்.

யாரை அணுகுவது

கல்விக்கடன் தேவையான மாணவர்கள் பெற்றோ ருடன் அருகிலுள்ள வங்கிக் கிளையை அணுகலாம். அல்லது கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையை அணுகலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முன்னோடி வங்கி யின் மூலம், நீங்கள் எந்த வங்கியில் கடன் பெற தகுதியானவர் என்கிற விவரத்தை தெரிந்து கொண்டு அந்த வங்கிக் கிளையையும் அணுகலாம்.

பல்கலைக்கழக மானியக்குழு வால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் அனைத்து படிப்புகளுக் கும் கல்விக் கடன் கிடைக்கும். கலை, அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை என அனைத்து துறை சார்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஐஐடி., ஐஐஎம். என்ஐஎப்டி., சிஏ., சிஎப்ஏ., ஐசிடபிள்யூஏ. என சிறப்பு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கும் கடனுதவி கிடைக்கும். இளநிலை படிப்பை வங்கிக் கடனில் முடித்தவர் உயர்கல்வி படிக்கவும் கடன் கிடைக்கும்.

என்ன தேவை?

கல்லூரியின் சேர்க்கை சார்ந்த விவரங்களையும், சேர்க்கை ரசீது, எத்தனை ஆண்டுகள் கொண்ட படிப்பு, அதற்கான கட்டண விவரங்களை கல்வி நிறு வனத்திலிருந்து பெற்று வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றோடு மாணவரின் மேல் நிலை கல்வி மதிப்பெண் சான்றிதழ். இருப்பிடச் சான்று, பெற்றோரின் வருமானச் சான்றிதழ் போன்றவை யும் கொடுக்க வேண்டும்.

உத்திரவாதம்

படிப்புக்கான மொத்த செலவு களும் நான்கு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் உத்திரவாதம் தேவை யில்லை. நான்கு லட்சத்துக்கு மேல் 7.5 லட்ச ரூபாய் வரை இருந்தால் பெற்றோர் / பாதுகாவலர் அல்லது மூன்றாம் நபர் தனிநபர் உத்திரவாதம் கொடுக்க வேண் டும். ரூ. 7.5 லட்சத்துக்கும் அதிக மான கல்விக்கடன் என்கிறபோது பெற்றோரின் சொத்து பிணையம் கொடுக்க வேண்டும். வெளிநாடு களில் படிக்க கல்விக்கடன் கேட் பவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.

எவ்வளவு கடன்

கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை கடன் கிடைக்கும். கல்வி கடனுக்கு 10 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை வட்டி கணக்கிடப்படும். சில வங்கிகள் படிப்பின் தன்மைக்கு ஏற்ப ரூ.30 லட்சம் வரையிலும் கல்விக்கடன் கொடுக்கிறது.

கல்லூரிக்கு செலுத்த வேண் டிய கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பாட புத்தகங்கள் மற்றும் ஆய்வகக் கட்டணம், விடுதி மற்றும் உணவு கட்டணங்கள், கல்விச் சாதனங்கள், சீருடைகள் மற்றும் புராஜெக்ட் செலவுகள் செய்யலாம்.

காலமுறை கடன்

வங்கிக் கடன் கேட்டவுடன் மொத்தமாக கிடைக்காது. கால முறைப்படித்தான் கிடைக்கும். அல்லது ஒவ்வொரு கல்வி பருவத்துக்கு ஏற்ப கிடைக்கும். கல்விக் கடன் மூலம் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும், அல்லது பருவ தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை வங்கியில் காட்ட வேண்டும்.

கற்றலில் குறைபாடு இருப்பதாக மேலாளர் கருதினால் மேற்கொண்டு தர வேண்டிய கடன் தொகை நிறுத்தப்பட வாய்ப்பும் உள்ளது. கல்லூரிப் படிப்பை இடை நிறுத்தம் செய்தாலோ அல்லது கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டாலோ கல்விக்கடன் நிறுத்தப்படும். இந்த சூழ்நிலை களில் அதுவரை வாங்கிய கடனை வட்டியோடு உடனே திரும்பச் செலுத்த வேண்டும்.

திரும்பக் கட்டுவது

படித்து முடித்த பிறகு ஒரு ஆண்டு அல்லது வேலை கிடைத்த ஆறு மாதங்களுக்கு பிறகு கடனை திருப்பி செலுத்த வேண்டும். மொத்த கடனையும் படிப்பு முடிந்த ஐந்து ஆண்டுகளில் கட்டலாம். ஒழுங்காக கட்டிவரும்பட்சத்தில் கடனை திரும்ப செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்க கோரலாம். இது சம்பந்தபட்ட வங்கி முடிவெடுக்கும். கல்விக்கடனுக்கு படிக்கும் காலத்தில் வட்டி கட்டத் தேவையில்லை. படிப்பு முடிந்த காலத்திலிருந்து வட்டி கணக்கிடப்படும்.

சலுகைகள்

கல்விக்கடனை திரும்பக் செலுத்தும்போது வட்டிக்கு மட்டும் 80-இ பிரிவில் வரிச் சலுகை பெறலாம். கடனை திரும்பச் செலுத்தும் முதல் 8 ஆண்டுகளுக்கு இந்த சலுகை கிடைக்கும். இது தவிர தொடர்ந்து ஒழுங்காக கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு ஒரு சதவீத வட்டி சலுகை கிடைக்கும். கல்விக் கடனுக்கான வட்டியில் மாணவிகளுக்கு 0.5 சதவீதம் குறைவு.

கட்டாமல் போனால்

இதர கடன்களை கட்டவில்லை என்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதுதான் கல்விக் கடனுக்கும். காவல்துறை, நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் கடனை வசூல் செய்ய முயற்சிக்கும். பாஸ்போர்ட் முடக்கம் செய்யவும் வங்கி நடவடிக்கைகள் எடுக்கும். சம்பந்தபட்டவர் வேலை பார்க்கும் நிறுவனத்தை அணுகி கடனை கட்டச் சொல்லலாம். சர்பாஸி சட்டப்படி சொத்துகளை பறிமுதல் செய்யவும் வங்கிக்கும் அதிகாரம் உள்ளது.

வேலை கிடைக்காவிட்டால்

கல்விக் கடன் மூலம் படித்த மாணவருக்கு வேலை கிடைக்க வில்லை என்றால் அதை வங்கிக்கு உரிய முறையில் தெரிவித்துவிட வேண்டும். இதற்கேற்ப வங்கி கால அவகாசம் அளிக்கும்.

வெளிநாட்டு படிப்பு

வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்கள் இங்குள்ள வங்கிகளில் கல்விக்கடன் வாங்கலாம். படிக்க விரும்பும் பல் கலைக்கழகத்தின் சேர்க்கை அனுமதி, செலவு விவரங்கள், மாணவரின் முகவரி சான்று, அடையாள சான்று, பான்கார்டு, பெற்றோரின் வருமான வரி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சார்ந்த விவரங்களை வங்கிக்கு கொடுக்க வேண்டும்.

காப்பீடு

வங்கி கடன் வழங்கினால் சம்பந் தபட்டவர்களுக்கு ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க வலியுறுத்துவார்கள். ஏனென்றால் கடனை வாங்கிய வருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து கடனை கட்ட முடியாத சூழ்நிலை உருவானால் காப்பீடு மூலம் ஈடு செய்து கொள்ள முடியும். இந்த நடைமுறை கல்விக் கடனுக்கும் பொருந்தும்.

யாருக்கு கிடைக்காது

கல்விக்கடன் கோரும் மாணவர் களின் குடும்பத்தினர் ஏற்கெனவே வங்கியில் கடன் வாங்கி அதை திருப்பி கட்டவில்லை என்றாலோ அல்லது குறைவான மதிப்பெண் கொண்ட மாணவராக இருந்தாலோ கடன் மறுக்கப்படலாம்.

அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் சேர கல்விக்கடன் கிடைக்காது. எதிர்காலத்தில் வேலைவாய்ப்பில் லாத படிப்பு என்றாலும் கடன் கொடுக்க தயங்கலாம். எல்லாம் சரியாக இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கபட்டு, அந்த வங்கியிட மிருந்து சரியான பதில் இல்லாத பட்சத்தில் நீதிமன்றத்தில் முறையிட வும் சட்டம் வழி செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x