

1942 ஆம் ஆண்டு பிறந்த முகம்மது அலி ஓய்வுபெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரர். உலகளவில் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரராக விளங்கினார்.
இஸ்லாமுக்கு மாறி தன்னுடைய கேஸியஸ் கிளே என்ற பெயரை முகம்மது அலி என்று மாற்றிக்கொண்டார். தனது பதினெட்டாவது வயதில் ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றார்.
பின்பு பிரபலமான குத்துச்சண்டை வீரரான சோனி லிஸ்டனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றார். மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர் முகம்மது அலி. வியட்நாம் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துப் பெரும் பிரச்சினைக்கு உள்ளானார்.
# ஒருவருடைய முழுமையான வாழ்க்கைக்கான பதிவே முதுமை.
# உண்மையில் நான் என் பெருமையை உணராததே என்னுடைய ஒரே தவறு.
# நான் சிறந்தவன் என்று கூறியிருக்கிறேன்; ஒருபோதும் நான் புத்திசாலி என்று சொன்னதில்லை.
# என்னை செயல்படுத்திக் கொண்டே வைத்திருப்பது இலக்குகளே.