Published : 22 Jun 2015 11:55 AM
Last Updated : 22 Jun 2015 11:55 AM

புத்தக அலமாரி - 22.06.2015

Title: Goals and Goal Setting

Author: Larrie Rouillard

Publisher: Viva Books Private Limited

வெற்றிக்கான இலக்குகளை நிர்ணயிப்பதும் அதனை செயல்படுத்துவதும் எளிதான காரியமல்ல என்கிறார் ஆசிரியர். இலக்கினை அடைவதற்கு மிகச்சிறந்த திட்டமிடலும் செயல்பாடும் தேவை. இலக்கு என்றால் என்ன? ஏன் இலக்கினை நிர்ணயிக்க வேண்டும்?

இலக்குகள் பற்றிய அடிப்படை கொள்கைகள் மற்றும் அதற்கான திட்டங்கள் போன்றவற்றைப்பற்றி பேசுகின்றது. இலக்குகளுக்கான வாய்ப்புகளைக் கண்டறிவது பற்றியும், இலக்கை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் பேசுகின்றது.

Title: Achieving Goals

Author: Kathleen Schienle

Publisher: Collins

பெரிய அளவிலான நோக்கமும் இலக்கும் நமது வெற்றிக்கு அத்தியாவசியமான விஷயங்களாகும். இலக்குகளை அமைத்துக்கொள்வதற்கும், அதனை அடைவதற்குமான விஷயங்களைப்பற்றி சொல்கின்றது இந்த புத்தகம். தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தொழில் நிறுவனத்துக்கும் மற்றும் பணியாளர்களுக்குமான சவாலான இலக்குகளை எவ்வாறு நிர்ணயித்துக்கொள்வது என்பதற்கான தெளிவான கருத்துகளைக் கொண்டுள்ளது. இலக்கினை நோக்கிய சூழ்நிலையினை உருவாக்குதல், பணியாளர்களுக்கான உதவிகள், தடைகளை தகர்த்தெறிதல் ஆகியவற்றைப்பற்றி பேசுகின்றது.

Title: Goals!

Author: Brian Tracy

Publisher: Tata McGraw-Hill

இலக்கின் அளவைப்பற்றி கவலைப்படாமல் அதனை அடைவதற்கான பல நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளைக் கற்றுத்தருகிறார் ஆசிரியர். நமது தனிப்பட்ட ஆற்றலை தீர்மானித்தல், வாழ்க்கையைப் பற்றிய உண்மையான மதிப்பீடு, தன்னம்பிக்கையினை அதிகரித்துக்கொள்ளுதல், சந்திக்கும் சிக்கல்களுக்கான தீர்வு மற்றும் சவால்களுக்கான பதிலடி ஆகியவற்றைப்பற்றி பேசுகின்றது. மேலும், நமது இலக்கின் மீதான தினசரி மதிப்பீடு மற்றும் நேர மேலாண்மை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

Title: The Highest Goal

Author: Michael Ray

Publisher: Tata McGraw-Hill

மேன்மையான இலக்கினைக் கொண்ட செயல்பாடே ஒருவரின் வெற்றிக்கான அடித்தளம் என்கிறார் ஆசிரியர். வெற்றிகரமான வாழ்வைப் பெறுவதற்கான அனைத்து வகையான வழிமுறைகளைப்பற்றியும் சொல்லும் புத்தகம் இது.

நமது வாழ்க்கைக்கான தனிப்பட்ட பாதை, வெற்றிக்கான ஆர்வம் மற்றும் செயல்முறைகளைப்பற்றி பேசுகின்றது. பயன் உருவானால், அதை வெற்றிக்கான திருப்புமுனையாக எப்படி மாற்றுவது மற்றும் ஆக்கப்பூர்வமான நபராக செயல்படுதல் தொடர்பான கருத்துகளையும் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x