

இங்கிலாந்தை சேர்ந்த பிரான்சிஸ் பெக்கான் 1561 ஆம் ஆண்டு முதல் 1626 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஒரு தத்துவஞானி. அரசியல் தலைவராகவும், சிறந்த சட்ட நிபுணராகவும், வழக்கறிஞராகவும் மற்றும் ஆசிரியராகவும் விளங்கினார். உலகை மாற்றியமைக்கும் ஆற்றல் அறிவியல் தொழில்நுட்பத்துக்கே உண்டு என்பதை உணர்ந்து, அத்துறையில் மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
முதலாம் ஜேம்ஸ் மன்னருக்கு ஆலோசகராக பணியாற்றினார். பெக்கானின் தத்துவ படைப்புகள் அவருக்கு பெரும்புகழ் பெற்றுத்தந்தன. 1597 ஆம் ஆண்டில் வெளியான அவரது ஆய்வுக் கட்டுரைகள் பெக்கானின் முக்கிய படைப்பாக கருதப்படுகிறது.
$ பயணம் என்பது இளமையில் கல்வியின் ஒரு பகுதியாகவும், முதுமையில் அனுபவத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது.
$ யார் அதிகமாக கேள்வி கேட்கிறார்களோ, அவர்களே அதிகமாக கற்றுக்கொள்ளவும், தக்கவைத்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.
$ நண்பர்களை சந்திக்கும்போது நட்பு அதிகரிக்கிறது, ஆனால் அபூர்வமாகவே அவர்களை சந்திக்க முடிகிறது.
$ நோய்களை விட மோசமானது அவற்றுக்கான தீர்வு.
$ வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்ததற்கும், முயற்சி இல்லாமல் தோல்வியடைந்ததற்கும் இடையே எந்த ஒப்பீடும் இல்லை.
$ தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிட அதிகமான வாய்ப்புகளை புத்திசாலிகள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
$ புதிய தீர்வுகளை எட்டவில்லை என்றால், கண்டிப்பாக புதிய தீமைகளை எதிர் கொள்ள வேண்டும்.
$ அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வது உண்மையில் சாத்தியமற்ற ஒன்று.
$ மனிதன் என்னவாக இல்லையோ அதை ஈடுசெய்ய அவனுக்கு கொடுக்கப்பட்டதே கற்பனைத்திறன்.
$ மோசமான மனிதர்களே பெரும்பாலும் சிறந்த ஆலோசனையை தருகிறார்கள்.
$ ஒருவன் திருடனாக உருவாவதற்கு காரணம் வாய்ப்பே.
$ நாம் நீதியை பராமரிக்கவில்லை என்றால், நீதி நம்மை பராமரிக்காது.
$ மோசமான தனிமை என்பது உண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே.