Published : 08 Jun 2015 11:38 AM
Last Updated : 08 Jun 2015 11:38 AM

துணிவே தொழில்: TiE இருக்க பயமேன்?

கடந்த சில வாரங்களாக தொழில் ஆலோசகரின் முக்கிய பங்கு குறித்து பார்த்தோம். இப்போது சிறந்த ஆலோசகர் எங்கு கிடைப்பார், அவரை அடையாளம் காண்பது எப்படி என்பதில் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது.

தகவல் தொழில்நுட்பம் பூதாகர வளர்ச்சி பெற்ற காலத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற தொழில்நுட்பவியலாளர்கள் ஏராளம். ஒருகட்டத்தில் இவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்தபோது அதற்கான சூழல் இல்லை. சிலிக்கான் பள்ளத்தாக்கில் உருவானதுதான் The Indus Entrepreneur (TiE) எனும் அமைப்பு. தொழில்முனையும் ஆசையில் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணியாற்றிய தகவல் தொழில்நுட்ப அறிஞர்கள் சிலரின் மதிய உணவு சந்திப்பின் பின்னணியில் 1992-ம் ஆண்டு உருவானதுதான் இந்த அமைப்பு.

இந்த அமைப்பானது தொழில் முனைவோரை ஊக்குவிப்பதோடு அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் நிதி உதவி செய்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்வதாக இருந்தது. லாப நோக்கம் இல்லாத தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வரும் இந்த TiE க்கு 18 நாடுகளில் 61 அலுவலகங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவையிலும் அலுவலகங்கள் உள்ளன.

இந்த அமைப்பானது தொழில் முனைவோரை ஊக்குவிப்பதோடு அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் நிதி உதவி செய்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்வதாக இருந்தது. லாப நோக்கம் இல்லாத தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வரும் இந்த TiE க்கு 18 நாடுகளில் 61 அலுவலகங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவையிலும் அலுவலகங்கள் உள்ளன.

இந்த அமைப்பில் தொழிலில் அனுபவம் மிக்கவர்கள், தொழிலில் தொடர்ந்து இருப்பவர்கள், இளம் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் என பலதரப்பட்டவர்களும் உறுப்பினர் களாக உள்ளனர். புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மட்டுமின்றி, தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வழி தெரியாமல் தவிப் பவர்களுக்கு உதவுவதிலும் இது முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கேற்ற சூழல், அதை சார்ந்தவர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட அனைத்துமே தொழில் சார்ந்ததாக இருக்க வேண்டும். அத்தகைய வாய்ப்பை நிச்சயம் இந்த அமைப்பு உங்களுக்கு உருவாக்கும். இதில் உள்ள தொழிலதிபர்கள் தங்களது தொழில் அனுபவத்தை மற்றவர்களுடன் அதாவது சக உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒருபோதும் தயங்கியதே கிடையாது.

சிறந்த தொழில் முனைவோராக எனது வாழ்க்கை பரிமளித்ததில் TiE அமைப்புக்கு மிகப் பெரும் பங்கு இருந்தது என்பதை எந்த தளத்திலும் பெருமையாக, வெளிப்படையாகக் கூறிக் கொள்ளத் தயங்கியதே கிடையாது. எனது தொழிலை இருவேறு கால கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். அதாவது TiE அமைப்பில் சேர்வதற்கு முன்பு என்றும் அதில் சேர்ந்ததற்குப் பிறகு என்றும் பிரிக்கலாம். முந்தைய காலகட்டத்தில் தயக்கத்துடன், மெதுவான வளர்ச்சியை மட்டுமே கண்ட எனக்கு பிந்தைய காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியதை காண முடிந்தது.

இன்றளவும் TiE நடத்தும் மாநாடுகள், கருத்தரங்குகள், கலந்தாய்வுக் கூட்டங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பங்கேற்கிறேன்.இது என்னை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும், புதிய தகவல்களைப் பெறவும் உதவியாக இருக்கிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு என்னை தொடர்ந்து கொண்டு செலுத்துகிறது.

ஒருகாலத்தில் தொழில் ரகசியம் என்ற ஒன்று இருந்தது. இன்று ரகசியம் ஏதும் இல்லை அயராத உழைப்பும், இலக்கு நோக்கிய பயணமும் இருந்தாலே வெற்றிக்கான படிகள் என்பதை உணர்ந்துள்ளோம். தொழிலில் ஆலோசகர்களின் பங்கு மிக முக்கியமாக இருப்பதால் TiE போன்ற அமைப்பில் உறுப்பினராவதன் மூலம் உங்களுக்கு சிறந்த ஆலோசகர் நிச்சயம் கிடைப்பார். உங்களது தொழிலை அடுத்த கட்டத்துக்கு எளிதாகக் கொண்டு செல்ல ஆலோசனை மட்டுமின்றி நிதி உதவியும் இந்த அமைப்பின் மூலம் கிடைக்கும்.

தொழிலில் உள்ளவர்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்களும் இதில் இணைந்து கருத்தரங்குகளில் பங்கேற் பதன் மூலம் உங்களை மெருகேற்றிக் கொள்ளலாம்.

இது தவிர, இணையதளத்தில் கூகுள் தேடலின் மூலமும் ஆலோசகரை தேடிக் கண்டுபிடிக்கலாம்.

இக்கட்டான தருணத்தில் உங்களது தொழில் மேம்பாட்டுக்கு ஆலோசனை அளிப்பவர்தான் மென்டார் எனப்படும் ஆலோசகர். ஆலோசகர் ஆலோசனை வழங்கினாலும் அதை செயல்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது. அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x