

ஒரு பிரச்சினைக்கு பலவித தீர்வுகள் உங்கள் முன்னே இருக்கலாம். அது உங்களுடையதாக இருக்கலாம் அல்லது ஆலோசகரின் ஆலோசனையாக இருக்கலாம். ஆனால் அதில் எதைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் தொழில் முன்னேற்றம் அமைந்துள்ளது.
உலகம் போற்றும் சிறந்த வில் வித்தை வீரன், வில்லுக்கு விஜயன் என்ற பெருமை பெற்றவன் அர்ஜுனன். பாரதப் போரின்போது இவனுக்கு சாரதியாக அதாவது தேரோட்டியாக இருந்தவர் கிருஷ்ணர். போர்க்களத்தில் அர்ஜுனன் மனம் சோர்ந்து துவண்டு விழுந்தபோது அவனைத் தேற்றி போரிட வேண்டிய சத்ரிய தர்மத்தை போதித்தவர் கிருஷ்ணர். சாரதியாக மட்டுமின்றி சிறந்த ஆசானாக போர்க்களத்தில் வெற்றிக்கான வியூகம் அமைத்தவரும் கிருஷ்ணரே.
இந்தப் போரில் தனது ஒரே லட்சியம் அர்ஜுனனை வீழ்த்துவது மட்டுமே என்று உறுதிபூண்டு போர்க்களம் இறங்கியவன் கர்ணன். இவரது தேரோட்டி சல்லியன். இவர் பல போர்க்களம் பார்த்த அனுபவம் கொண்டவர். போரில் நாகாஸ்திரத்தை கர்ணன் பிரயோகிக்கும் முன், அர்ஜுனனின் மார்புக்கு குறி வைக்குமாறு கர்ணனை சல்லியன் வலியுறுத்தினார்.
ஆனால் அவனது பேச்சை கர்ணன் கேட்காமல், அர்ஜுனனின் தலைக்கு குறிவைத்தார். அஸ்திரம் வருவதைக் கண்டு கட்டைவிரலால் தேரை அழுத்தினார் கண்ணன். இதனால் நாகாஸ்திரம் அர்ஜுனனின் கிரீடத்தை தட்டிச் சென்றது. இந்த விஷயத்தில் சல்லியன் பேச்சை கர்ணன் கேட்காமல் எடுத்த முடிவு போரின் போக்கையே மாற்றிவிட்டது.
இதுபோலத்தான் தொழில்துறையிலும். பெரும்பாலானவர்கள் ஆலோசகர் களின் பேச்சைக் கேட்டு நடவடிக்கை எடுக்கிறார்கள். சிலர் தங்களுக்கு பட்டதை செய்கிறார்கள். ஆக, புராண காலத்தில் இருந்து இப்போது வரை முடிவு என்பது அவரவர் கையில்தான் உள்ளது. ஒரு பிரச்சினைக்கு பலவித தீர்வுகள் உங்கள் முன்னே இருக்கலாம். அது உங்களுடையதாக இருக்கலாம் அல்லது ஆலோசகரின் ஆலோசனையாக இருக்கலாம். ஆனால் அதில் எதைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் தொழில் முன்னேற்றம் அமைந்துள்ளது.
இதனால் முடிவுகளை எடுக்கும் முன்பு இது சரிவருமா என உங்களை நீங்களே பல தடவை கேட்டுக் கொள்ளுங்கள். குறிப்பாக பின்வரும் கேள்விகளை கேட்டுப் பாருங்கள்.
நீங்கள் எடுக்கும் முடிவால் எத்தகைய பாதகமான விளைவுகள் ஏற்படும் என்பதை ஆய்வு செய்யுங்கள். இதனால் எவ்வளவு லாப, நஷ்டம் ஏற்படும் என்பதை கணக்கிடுங்கள்.
உங்களது முடிவு உங்களுக்கு சாதகமாக அல்லது எந்த அளவுக்கு பாதகமாக இருக்கும் என்பதை தீர்மானியுங்கள்.
இந்த முடிவை எடுக்கும்போது உங்களது மனோநிலை எந்த அளவுக்கு இருந்தது. இப்போது உங்கள் மன நிலை என்ன என்பதை ஆராயுங்கள்
நீங்கள் எடுக்கும் முடிவை உங்கள் நிறுவனத்தில் உள்ள மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா, இத்தகைய சிறந்த முடிவை எடுத்ததற்காக உங்களை பாராட்டுவார்களா என்று சிந்தியுங்கள்.
இந்த முடிவால் 6 மாதத்துக்குப்பிறகு உங்கள் நிறுவனம் எத்தகைய நிலையை எட்டியிருக்கும் என்பதை மதிப்பீடு செய்யுங்கள்.
சரியான காரணங்களுக்காக சரியான முடிவை எடுத்துள்ளீர்கள் என்று நிச்சயம் நீங்கள் நம்புகிறீர்களா?
இந்த முடிவை ஏன் எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுப் பாருங்கள்.
இந்த முடிவால் வெற்றி வசப்படுமா என்பதை ஒரு முறைக்கு பல முறை ஆராயுங்கள்.
இந்த முடிவால் பின்னாளில் உங்கள் நிறுவனம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை பரிசீலியுங்கள்.
இத்தனை கேள்விகளுக்கும் உங்களுக்கு ஆதரவான, சாதகமான பதில் கிடைத்தால் உங்களது முடிவு நிச்சயம் சரியாக இருக்கும்.
தொழில் தொடங்குவது என்ற முயற்சி யில் பல்வேறு கட்டங்களை இது வரையில் பார்த்தோம். தொழிலில் மென்டார் எனப்படும் ஆலோசகரின் பங்களிப்பு எவ்வளவு அவசியம் என்பதைப் பற்றியும், ஆலோசகரை எங்கு தேடிக் கண்டுபிடிப்பது என்பதையும் பார்த்தோம். வெற்றி பெற்ற பல தொழில் நிறுவனங்களில் இன்றளவும் மென்டாரின் பங்களிப்பு இருப்பது உலகம் அறிந்ததே.
முடிவுகள் எடுக்க வேண்டியது என்று வரும்போது இருவேறு சூழல் மற்றும் சந்தர்ப்பங்களில் மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அது நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியின் கையில்தான் உள்ளது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நமது இதிகாசமான மகாபாரதத்தில் உள்ளது.
உலகம் போற்றும் சிறந்த வில் வித்தை வீரன், வில்லுக்கு விஜயன் என்ற பெருமை பெற்றவன் அர்ஜுனன். பாரதப் போரின்போது இவனுக்கு சாரதியாக அதாவது தேரோட்டியாக இருந்தவர் கிருஷ்ணர். போர்க்களத்தில் அர்ஜுனன் மனம் சோர்ந்து துவண்டு விழுந்தபோது அவனைத் தேற்றி போரிட வேண்டிய சத்ரிய தர்மத்தை போதித்தவர் கிருஷ்ணர். சாரதியாக மட்டுமின்றி சிறந்த ஆசானாக போர்க்களத்தில் வெற்றிக்கான வியூகம் அமைத்தவரும் கிருஷ்ணரே.
aspireswaminathan@gmail.com