Published : 29 Jun 2015 10:37 AM
Last Updated : 29 Jun 2015 10:37 AM

புத்தக அலமாரி- 29.06.2015

Title: Crucial Conversations

Author: Kerry Patterson & Others

Publisher: Tata McGraw-Hill

நமது வாழ்வின் மிகக் கடினமான மற்றும் முக்கியமான உரையாடல்களை கையாளுவதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுக்கிறார் ஆசிரியர். அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை, நமது பேச்சின் மூலம் வெற்றிகரமாக சமாளிக்கத் தேவையான உத்திகளைக் கொண்டுள்ளது.

அதேசமயம் வசப்படுத்தும் வகையிலான உரையாடல்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது, முக்கியமான உரையாடல்களை செயல்பாட்டு முறைக்கு மாற்றி வெற்றி காண்பது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

Title: Corporate Conversations

Author: Shel Holtz

Publisher: Prentice Hall of India

தொழில் நிறுவன பணியாளர்களின் மனஉறுதி, உற்பத்தித்திறன் மற்றும் செயல்பாடு போன்றவற்றின் மேம்பாட்டிற்கு திறமையான உரையாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களின் வளர்ச்சிக்கான வழிமுறைகளைச் சொல்லும் புத்தகம் இது.

உரையாடல்களை ஒழுங்குபடுத்துதல், உணர்ச்சிபூர்வமான செய்திகளை வழங்குதல், வெளிப்படையான தகவல்களை தெரிவித்தல் மற்றும் நிறுவன உரையாடல்கள் மீதான தொடர்ச்சியான அளவீடு ஆகியவற்றைப்பற்றி பேசுகின்றது. மேலும், பணியாளர் உரையாடல்களின் வகைகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

Title: Difficult Conversations

Author: Douglas Stone & Others

Publisher: Penguin Books

கடுமையான உரையாடல்களை மன அழுத்தமின்றி வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான அணுகுமுறைகளைப்பற்றி பேசுகின்றது இந்த புத்தகம். உரையாடல்களின் அடிப்படை கட்டமைப்பு, மேற்கொண்ட உரையாடல்களின் மீதான விளக்கம், நம்முடைய மற்றும் மற்றவர்களுடைய வலிமையான உணர்வுகளை கையாளுதல் பற்றிய கருத்துகள் இடம்பெற்றுள்ளது.

விவாதம், குற்றச்சாட்டு, தனித்துவம், உணர்ச்சி வெளிப்பாடு, கற்றல் போன்ற உரையாடல் விஷயங்களைப் பற்றியும் பேசுகின்றது.

Title: Fierce Conversations

Author: Susan Scott

Publisher: Berkley Books

வலிமையான உரையாடல்களின் மூலமே நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்கிறார் ஆசிரியர். நமது பணியிலும், தனிப்பட்ட வாழ்விலும் வெற்றி பெறுவதற்கான உரையாடல்கள் பற்றிய கருத்துகளைக் கொண்டுள்ளது

இந்த புத்தகம். தினசரி உரையாடல்கள் பயனுள்ள வகையில் அமையவும், சரியாக சென்றடையவும் தேவையான வழிகளைக் கற்றுக்கொடுக்கிறார். அர்த்தமுள்ள உரையாடல்களுக்கான தடைகளை தகர்த்தெறிதல், புரிதலை மேம்படுத்துதல் பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x