Published : 18 May 2015 11:22 AM
Last Updated : 18 May 2015 11:22 AM

புத்தக அலமாரி - 18.05.2015

Title: Customer Satisfaction

Author: Dru Scott

Publisher: Viva Books private Limited

நீண்டகால அடிப்படையில் வாடிக்கையாளருடனான உறவுமுறைக்கான கருத்துகளைக் கொண்ட புத்தகம். முழுக்க முழுக்க பயிற்சிகள் மற்றும் நடைமுறை சார்ந்த, நிரூபிக்கப்பட்ட உக்திகளைக்கொண்டு வாடிக்கையாளர் சேவைபற்றி கற்றுத் தருகின்றார் ஆசிரியர்.

கடினமான வாடிக்கையாளர்களை எவ்வாறு கையாளுவது மற்றும் வாடிக்கையாளர் சேவையிலுள்ள தடைகளை எவ்வாறு தகர்த்தெறிவது பற்றி சொல்லப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர் கருத்து பற்றிய விஷயங்களும் ஆராயப்பட்டுள்ளது.

Title: 101 Ways to Really Satisfy Your Customers

Author: Andrew Griffiths

Publisher: Allen & Unwin

ஒரு வணிகம் செழித்து வளர மிக முக்கியமான காரணம் அதன் வாடிக்கையாளர்களே. அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து அந்த வணிகத்தில் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிகளைச் சொல்கின்றது இந்த புத்தகம். வாடிக்கையாளர் சேவையினை மேம்படுத்தத் தேவையான எளிமையான குறிப்புகளைக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

வாடிக்கையாளரை சரியான முறையில் புரிந்துகொள்ளுதல், பணிச்சூழல், ஊழியர்கள், தனிப்பட்ட கவனம், உடனடி சேவை போன்ற வாடிக்கையாளர் சேவை தொடர்பான அனைத்து விஷயங்களையும் பேசுகின்றது.

Title: Measuring and Managing Customer Satisfaction

Author: Sheila Kessler

Publisher: Wheeler Publishing

வாடிக்கையாளர் திருப்தி மீதான அளவீடு மற்றும் அதனை சரியான முறையில் நிர்வகிக்கும் முறைகளைப் பற்றிய புத்தகம் இது. இன்றைய வாடிக்கையாளர் சேவையிலுள்ள வாய்ப்புகள் மற்றும் சிக்கல்கள் பற்றிய நடைமுறை கருத்துகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழிமுறைகள் அனைத்தும் செயல்முறை சார்ந்ததாகவும், வாடிக்கையாளர் சேவை தொடர்பான கதைகள் மற்றும் உதாரணங்கள் ஆகியன பல நிறுவனங்களில் பயன்படுத்துபவையாகவும் இருப்பது சிறப்பு.

Title: Measuring Customer Satisfaction

Author: Richard F Gerson

Publisher: Viva Books private Limited

தரமான வாடிக்கையாளர் சேவையே இன்றைய நிறுவனங்களுக்கு தேவை என்பதற்கான கருத்துகளைக் கொண்ட புத்தகம் இது. இந்த சேவையின் தரத்தை எவ்வாறு கணக்கிடுவது, எப்பொழுது கணக்கிடுவது மற்றும் கிடைக்கும் முடிவுகளை ஆராய்ந்து அவற்றை எப்படி அடுத்தகட்ட செயல்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்வது என்பதைச் சொல்கின்றது.

சிறந்த தரமான சேவை செயல்திறன்களுக்கான அங்கீகாரம், போன்ற கருத்துகளைப் பற்றியும் பேசுகின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x