வெற்றி மொழி: தாமஸ் புல்லர்

வெற்றி மொழி: தாமஸ் புல்லர்
Updated on
1 min read

1608- ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த வரலாற்றாசிரியர். வரலாறு, இறையியல் மற்றும் கவிதை தளத்தில் தீவிரமாக இயங்கியவர். பல நூல்கள் வெளிவந்துள்ளது. தனது எழுத்தின் மூலம் இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர்.

குறிப்பாக அவரது மரணத்துக்குபின் வெளியான வொர்த்தீஸ் ஆப் இங்கிலாந்து என்ற படைப்பு பெரும் புகழ்பெற்றது. தனது செழுமையான எழுத்தின் மூலம் சிறப்படைந்த தாமஸ் புல்லர், ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார்.

$ எளிமையானதாக மாறுவதற்கு முன் அனைத்து விஷயங்களும் கடினமானதே.

$ நாம் அழுதுகொண்டே பிறக்கின்றோம், குறை சொல்லியே வாழ்கின்றோம், ஏமாற்றத்துடன் இறக்கின்றோம்.

$ ஒரு செம்மறியாடு ஓநாயிடம் சமாதானம் பேசுவது பைத்தியக்கார செயல்.

$ உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமென்றால், ஒருவருக்கு நல்ல மகளாக வாழும் ஒருவரை திருமணம் செய்துகொள்ளுங்கள்.

$ நினைவில் வைத்திருக்கும் விஷயங்களை விட அதிகமானவற்றை நாம் மறந்து விடுகின்றோம்.

$ ஒரு புத்திசாலி வாய்ப்பை அதிர்ஷ்டமாக மாற்றுகிறான்.

$ பிரார்த்தனை என்பது பகல் பொழுதுக்கான சாவியாகவும் இரவுக்கான பூட்டாகவும் இருக்கின்றது.

$ கனிவான முகத்துடன் கொடுக்கப்படும் பரிசு என்பது இரட்டிப்பு அன்பளிப்புக்கு சமமானது.

$ மோசமான சாக்குபோக்குகள் என்பது எதுவும் சொல்லாததைவிட மட்டமானது.

$ ஒரு முட்டாளின் சொர்க்கம் ஒரு புத்திசாலியின் நரகம்.

$ உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன.

$ வாத்து மீதான விசாரணைக்கு நரி நீதிபதியாக இருக்கக் கூடாது.

$ மோசமான சகவாசத்தைவிட தனிமையே சிறந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in