

ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எட்ட திட்டமிடுவது, திட்டமிட்டதை செயல்படுத்துவது என பல்வேறு நிலைகளைப் பார்த்தோம். திட்டமிட்ட இலக்கை நோக்கி செயல்படுகிறோமோ என்று தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
நிர்ணயித்த இலக்கை எட்டும் வகையில் உங்களுக்கு ரிசல்ட் கிடைத்தால் அது வெற்றி. அதை எட்டவில்லை என்றால் நீங்கள் ஆரம்பித்த தொழிலின் மூலம் உங்களுக்குக் கிடைத்த பாடம் என நினைக்க வேண்டும். எந்தத் தொழிலிலும் தோல்வி என்ற ஒன்று கிடையாது.
இன்று முன்னணியில் திகழும் வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் மற்றும் வெற்றிகரமான விளையாட்டு வீரர்கள் அனைவருமே தோல்வியைச் சந்திக்க வில்லை. அவர்கள் நிர்ணயித்த இலக்கை எட்டாதபோது, அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை பாடமாகக் கொண்டனர்.
எந்த ஒரு தொழிலிலும் தோல்வி என்ற ஒன்று கிடையாது. அது அந்தத் தொழிலின் மூலம் உங்களுக்குக் கிடைத்த பின்னூட்டம் (ஃபீட்பேக்) என்று நினைக்க வேண்டும்.
நீங்கள் நிர்ணயித்த இலக்கை எட்டவில்லை எனில் எந்த பகுதியில் தவறு நிகழ்ந்தது என்று ஆராய வேண்டும். தொடங்கிய தொழில் தவறானதா அல்லது தொடங்கிய காலம் தவறானதா என்று பார்க்க வேண்டும்.
எட்டமுடியாத இலக்கை நீங்கள் நிர்ணயித்துவிட்டீர்களா என்று ஆராய வேண்டும். அடுத்து இலக்கை எட்டுவதில் அதாவது செயல்படுத்தும் நிகழ்வில் எந்தப் பகுதியில் தவறு நடந்தது என்று பார்க்க வேண்டும்.
aspireswaminathan@gmail.com