Published : 18 May 2015 11:28 AM
Last Updated : 18 May 2015 11:28 AM

துணிவே தொழில்: ஆலோசகர் அவசியமா?

தொழில் தொடங்குவதற்கு முதலில் துணிவு அவசியம். தொடங் குவது என்று தீர்மானித்த பிறகு முடிவில் ஊசலாட்டம் இருக்கக் கூடாது. தொழிலில் வெற்றி பெற இலக்கு அவசியம். அதை செயல்படுத்த கண்காணிப்பு மிக முக்கியம். தொடர் கண்காணிப்பும், அதற்கேற்ப சரியான நடவடிக்கைகளும்தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதெல்லாம் இதுவரை பார்த்து வந்தோம்.

தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பதற்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. எவ்வளவு புத்தகங்கள் இருந்தாலும் தேர்வு எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருப்பது கைடு எனும் வழிகாட்டிதான். புத்தகத்தில் இல்லாத விஷயங்கள் நிச்சயம் வழிகாட்டியில் இருக்காது. ஆனால் தேர்வில் எத்தகைய கேள்விகள் இருக்கும், அதற்கு எப்படி பதிலளித்தால் மதிப்பெண் கிடைக்கும் என்பதற்கு உதவுவதுதான் கைடு எனப்படும் வழிகாட்டி அல்லது துணைவன்.

தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பதற்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. எவ்வளவு புத்தகங்கள் இருந்தாலும் தேர்வு எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருப்பது கைடு எனும் வழிகாட்டிதான். புத்தகத்தில் இல்லாத விஷயங்கள் நிச்சயம் வழிகாட்டியில் இருக்காது. ஆனால் தேர்வில் எத்தகைய கேள்விகள் இருக்கும், அதற்கு எப்படி பதிலளித்தால் மதிப்பெண் கிடைக்கும் என்பதற்கு உதவுவதுதான் கைடு எனப்படும் வழிகாட்டி அல்லது துணைவன்.

அதைப்போலத்தான் தொழிலில் வழிகாட்டியாக இருப்பது ஆலோ சகர்கள்தான். நவீன தொழில் யுகத்தில் வழிகாட்டிகள் அல்லது ஆலோச கர்களையே மென்டார் (Mentor) என்கின் றனர். ஆனால் ஆலோசகர்களுக்கும், மென்டார்களுக்கும் சிறிது வித்தியாசம் உள்ளது.

அதனால் மென்டார் என்பவர் தொழில் வளர்ச்சிக்கு அவசியமாகிறார். தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு ஒவ்வொரு கட்டத்திலும், சந்தர்ப்பத்திலும் ஆலோசனை அவசியம். அத்தகைய ஆலோசனைகளை அளிக்கும் மென்டார்கள், தொழிலில் எவ்வித பங்கும் இல்லாத அதேசமயம் தொழிலைப் பற்றி நன்கு அறிந்தவராக இருப்பார்.

தொழில் ஆலோசகர்கள் வெறுமனே ஆலோசனைகளை மட்டுமே வழங்குவர். ஆனால் மென்டார் எனப்படுபவர், உங்களுடன் பேசி உங்கள் பிரச்சினைகளை ஆராய்வார். நீங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து அதில் எது சரியானதாக இருக்கும் என்பதை உங்கள் மூலமாகவே அறிந்து அதை பரிந்துரைப்பார். அதாவது உங்கள் பிரச்சினைக்கு உங்களிடம்தான் தீர்வு இருக்கும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள் மென்டார்கள். அத்தகைய மென்டார்களின் வழிகாட்டுதல் உங்கள் தொழிலை மேலும் சிறக்கச் செய்யும்.

இப்போதெல்லாம் Mentoring, Mentor என்ற வார்த்தைகளை அதிகமாகப் பார்க்கின்றோம். தொழில் முனைவில் mentor என்பவர் யார்? mentoring என்றால் என்ன? என்பதைப் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

Mentor என்ற வார்த்தை ஆழமான பொருள் கொண்டது. ஆலோசகர் அல்லது வழிகாட்டி என்ற வரைமுறைக்கும் அப்பாற்பட்ட உள்ளர்த்தம் கொண்டது. Mentor என்ற வார்த்தைக்கு எனது பார்வையில் தமிழில் குரு என்று சொல்லலாம். mentoring என்பதை குருத்துவம் என்று சொல்லலாம்.

புது யுக தொழில்முனைவு முயற்சியில் ஒரு ஐடியாவை மெருகேற்றுவதில் தொடங்கி சந்தைப்படுத்தும் வரை இருக்கும் பல்வேறு ஆரம்ப நிலைகளில் மட்டுமல்லாது அதற்குப் பிந்தைய வளர்ச்சி நிலையிலும் ஒரு Mentor இன் பங்கு பெரும் துணை செய்யக் கூடியது.

தொழில் முனையும் நபரை நன்கு புரிந்தும் அதே வேலை அவரது தொழில் ஐடியா சம்பந்தப்பட்ட ஆழ்ந்த துறை சார்ந்த அறிவும் அனுபவமும் இருக்கும் ஒருவர் தான் அந்த தொழில் முனையும் நபரின் mentor ஆக இருக்க முடியும். மேலும் தொழில் முனைவுக்கு முழுமையான mentor ஆக இருக்க வேண்டும் என்றால் அவர் குறைந்த பட்சம் ஏழு வருடங்களாவது தொழில் முனைப்பில் முழுமையாக ஈடுபட்டவராக இருக்க வேண்டும்.

தொழில் முனைவு என்பது நீச்சல் போன்றது. நீச்சல் நன்கு தெரிந்த ஒருவர் தான் நீச்சல் சொல்லிக்கொடுக்க முடியும். தோல்வி அடைந்த தொழில் முனைவோர்கள் பெரும் வெற்றி பெற்றவர்களை விடவும் சிறந்த mentor களாக இருக்கக்கூடும். கடும் தோல்விகளையும் பிரச்சினைகளையும் சந்தித்து பக்குவப்பட்ட ஒருவரால் மிக நன்றாக வழிகாட்ட முடியும்.

இன்று வெளிநாடுகளில் படித்து விட்டு வந்து அல்லது பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டோ அல்லது விலகியோ mentor என்ற பெயரில் பலரும் உலவுகிறார்கள். இவர்களிடம் அவர்கள் சார்ந்த துறைகளில் சில பல ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாமே தவிர mentor களாக ஏற்றுக்கொள்வது என்னைப் பொறுத்தவரை சரியான அணுகு முறையாக இருக்காது.

Mentoring அல்லது குருத்துவம் என்பது மகாபாரதத்தில் அர்ஜுனனின் சூழ்நிலையையும், மனநிலையையும், இயல்புகளையும் மற்றும் அவனது திறன்களையும் முழுதாக உணர்ந்து ஒரு ஆழமான வழிகாட்டுதலை - உணர்வித்தலை - ஊக்குவித்தலை எப்படி கிருஷ்ண பகவான் செய்கிறாரோ அதைப்போன்ற தெளிவித்தலும் கைப்பிடித்து வழிகாட்டலுமேதான் உண்மையான Mentoring ஆக இருக்க முடியும். சிறந்த மென்டாரை தேர்வு செய்வது எப்படி என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x