

1844-ஆம் ஆண்டு பாரீஸில் ஒரு புத்தக விற்பனையாளரின் மகனாகப் பிறந்து 1924 வரை வாழ்ந்த பிரெஞ்சு கவிஞர் அனடோல் பிரான்ஸ். இவர் ஒரு கதாசிரியர் மற்றும் பத்திரிகையாளர். இவரது இளமைக்காலம் பெரும்பாலும் புத்தகங்களைச் சுற்றியே அமைந்திருந்தது.
மாபெரும் வெற்றிகரமான நாவலாசிரியரான இவர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த படைப்பாளியாகக் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரக்கூடியதாக அமைந்திருந்தன. தன்னுடைய கலை இலக்கிய பணிகளுக்காக 1921 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.
$ எல்லோராலும் மதிக்கப்படும் புத்தகம் பெரும்பாலானோரால் படிக்கப்படுவதில்லை.
$ புத்திசாலித்தனமாக யோசிப்பதும் சொதப்பலாக செய்து முடிப்பதும் மனிதனின் பிறவிக் குணமாகும்.
$ மனிதனைப் பற்றி சொல்லப்பட்ட விஷயங்களில் எல்லாம் மிகமிக மோசமான ஒன்று அவனை பகுத்தறியத் தெரிந்த விலங்கு என்பதுதான்.
$ நீங்கள் பேசுவதன் மூலமே பேசவும், படிப்பதன் மூலம் படிக்கவும், ஓடுவதன் மூலமே ஒடவும் கற்றுக் கொள்கின்றீர்கள். அதே போல் அன்பு செய்வதன் மூலமே அன்பு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.
$ சிறந்த சாதனைகளைச் செய்ய நாம் உழைத்தால் மட்டும் போதாது, கனவு காண வேண்டும்; திட்டமிட்டால் மட்டும் போதாது, நம்பிக்கையும் வேண்டும்.
$ நிறைய விஷயங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதை விட குறைந்த விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதே சிறந்தது.
$ பொய் என்பது இல்லாவிட்டால், உலக வாழ்க்கையானது மனிதனுக்கு ஏக்கமும் சலிப்பும் கொண்டதாகிவிடும்.
$ ஏழை எப்போதுமே காசு கொடுக்க வேண்டியிருப்பது விதியினால் அல்ல; அவனுடன் கடனுக்கு வியாபாரம் செய்ய ஆளில்லாததால்தான்.
$ அப்பாவித்தனமாக இருப்பது மனதுக்கு மட்டுமே நல்லது. மூளைக்கு அது நல்லதல்ல.
$ மனிதர்கள் அவர்களின் செயல்பாடுகளால் மட்டுமே வாழ்கின்றார்கள். தத்துவங்களால் இல்லை.