வெற்றி மொழி: வின்ஸ்டன் சர்ச்சில்

வெற்றி மொழி: வின்ஸ்டன் சர்ச்சில்
Updated on
1 min read

1874-ம் ஆண்டு பிறந்த வின்ஸ்டன் சர்ச்சில், ராணுவ அதிகாரி, ராணுவ முகாம்களில் பத்திரிகைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவர், பாராளுமன்ற உறுப்பினர், பேச்சாளர், எழுத்தாளர், ஓவியர், அமைச்சர், பிரதமர் போன்ற பன்முகங்களைக் கொண்டவர்.

இங்கிலாந்தின் பிரதமராக 1940 முதல் 1945 வரையிலும், பிறகு மீண்டும் 1951 முதல் 1955 வரையிலும் பதவி வகித்தார். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் பெருமையை உலகறியச் செய்தவர். பெரும் புகழ்பெற்ற உலக தலைவர்களில் ஒருவராக போற்றப்படும் வின்ஸ்டன் சர்ச்சில், இலக்கியத்துக்கான நோபல் பரிசினையும் பெற்றிருக்கிறார்.

# உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றார்களா? நல்லது. அப்படியென்றால், எப்பொழுதோ எதோ ஒரு விஷயத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

# அணுகுமுறை என்பது பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய ஒரு சிறிய விஷயமாகும்.

# ஒரு நாடு தன்னகத்தே கொண்டுள்ள மிகப்பெரிய சொத்து ஆரோக்கியமான குடிமக்களே.

# சொல்லாத வார்த்தைகளுக்கு நாமே முதலாளி, ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு நாம் அடிமை.

# காற்றுக்கு எதிராகவே பட்டங்கள் எழுகின்றன, காற்றுடன் சேர்ந்து எழுவதில்லை.

# நம்பிக்கை இல்லாதவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள கஷ்டத்தைக் காண்கிறான்; நம்பிக்கை உள்ளவன் ஒவ்வொரு கஷ்டத்திலும் உள்ள வாய்ப்பை காண்கிறான்.

# உண்மையில் நகைச்சுவை என்பது மிகவும் சீரியஸான ஒரு விஷயமாகும்.

# வெற்றி என்பது இறுதியானதல்ல; தோல்வி என்பது மரணத்துக்குரிய செயலல்ல; அதுவே வெற்றிகளின் எண்ணிக்கையை தொடர்வதற்கான துணிவாகும்.

# நீங்கள் நரகத்தின் வழியே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றால், தொடர்ந்து போய்க் கொண்டேயிருங்கள்.

# தைரியமே, உங்களை எழுந்து நின்று பேச வைக்கின்றது; அதுவே உங்களை உட்கார்ந்து கேட்கவும் வைக்கின்றது.

# பெருந்தன்மையின் விலை பொறுப்பை அதிகரிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in