Published : 27 Apr 2015 10:47 AM
Last Updated : 27 Apr 2015 10:47 AM

புத்தக அலமாரி- 27.04.2015

Title: Cultivate a Cool Career

Author: Ken Langdon

Publisher: Pearson Power

பணியிடங்களில் வெற்றிகரமான வாழ்க்கை முறையினை அமைத்துக்கொள்ளத் தேவையான அம்சங்களைப்பற்றி சொல்லித்தருகிறார் ஆசிரியர்.

பணிபுரியும் நிறுவனத்தில் நம்முடைய அணுகுமுறையினை நேர்மறையானதாகவும், பயிற்சிக்குரியதாகவும் அமைத்துக்கொள்ளச் சொல்பவர், ஒரே நிறுவனத்தில் வாழ்க்கை முழுவதையும் செலவிடவேண்டாம் என்பதற்கான காரணங்களையும் சொல்கின்றார். மேலும், அலுவலக அரசியல் பற்றியும், தகுதியான இடங்களிலிருந்து அறிவுரைகளைப் பெறுதல் பற்றியும் பேசுகின்றார்.

Title: Career Management Secrets

Author: Carolyn Boyes

Publisher: Harper Collins

வாழ்க்கையினை நிர்வகிக்கத் தேவையான அடிப்படை விஷயங்களைப்பற்றி பேசுகின்றது இந்தப் புத்தகம். வெற்றிக்கான இலக்குகளை நிர்ணயித்தல், சிறந்த திட்டங்களை உருவாக்கி அதனை செயல்பாட்டு நிலைக்கு கொண்டுவருதல் மற்றும் பணியிட சூழலுக்கு தகுந்த வகையில் நம்மை மாற்றிக்கொள்ளுதல் ஆகியவற்றைப்பற்றி தெளிவான கருத்துகளைக் கொண்டுள்ளது.

மேலும், நமக்கான தனித்திறமையினை உருவாக்கி அதனை தேவையான நேரத்தில் வெளிக்கொண்டுவருதல் தொடர்பான உத்திகளையும் சொல்கின்றது.

Title: Making Career Transitions

Author: Jane Ballback and Jan Slater

Publisher: Wheeler Publishing

சந்தர்ப்ப சூழ்நிலைகளால், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் என்பது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. மாற்றங்களின் மூலம் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான கருத்துகளைப்பற்றி பேசுகின்றது இந்த புத்தகம். வெற்றிகரமான வாழ்க்கைத் திட்டங்களை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது என்பதை சுவாரஸ்யமான கதைகள், திட்டங்கள் மற்றும் அதற்கான வாய்ப்புகளின் மூலம் சொல்லித்தருகின்றது.

மேலும், வாழ்க்கை மாற்றத்திற்கான செயல்பாட்டுத் திட்டங்களைப்பற்றியும் பேசுகின்றது.

Title: The Truth about Managing Your Career

Author: Karen Otazo

Publisher: Pearson Education

தொழில், வேலை மற்றும் வாழ்க்கையினை திறம்பட நிர்வகிக்கத் தேவையான வழிமுறைகளைச் சொல்லும் புத்தகம் இது. இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் நடைமுறை சார்ந்ததாகவும் அதேசமயம் எளிதில் உபயோகப்படுத்தும்படியும் உள்ளது.

வெற்றிக்கு தேவைப்படும் சரியான திசையினை அமைத்துக்கொள்ளவும், எதிர்வரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் தேவையான மேலாண்மை உத்திகளைச் சொல்லித்தருகின்றார் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x