Published : 30 Mar 2015 11:50 AM
Last Updated : 30 Mar 2015 11:50 AM

புத்தக அலமாரி- 30.03.2015

Title: All About Etiquettes

Author: Raj Anand

Publisher: Goodwill Publishing House

மனித வாழ்வில் தினசரி நடக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களுக்கான நடத்தை முறைகளைப்பற்றிய புத்தகம் இது. நம்முடைய ஒவ்வொரு நாளுக்கும், மாறுபட்ட சூழ்நிலைகளுக்கும் தேவையான ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை கற்றுக்கொடுக்கிறார் ஆசிரியர். ஒழுக்கம் மற்றும் நடத்தை முறைகளின் வரலாறு, விருந்து, அலுவலகம், ஈமெயில், தகவல் தொடர்பு, தொலைபேசி மற்றும் நேர்முகத்தேர்வு போன்றவற்றில் நம்முடைய நடவடிக்கை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

Title: Power Etiquette

Author: Dana May Casperson

Publisher: Magna Publishing

நம்முடைய அனைத்து விதமான வெற்றிகளுக்கும் வாயிற்கதவு நமது ஒழுக்கம் மற்றும் நடத்தை முறைகளே. முக்கியமாக மேலாண்மையியலில் இவை மிக முக்கிய வணிக திறனாகப் பார்க்கப்படுகின்றது. நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத, ஆனால் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய பண்புகளைக் கற்றுக்கொடுக்கும் புத்தகம் இது. ஒரு செயலுக்கான முதல் அபிப்ராயம் மற்றும் பிற முக்கியமான தருணங்களில் நம்முடைய நடைமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் அணுகுமுறை பற்றியும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

Title: Correct Etiquette & Manners

Author: Sam Philips

Publisher: Goodwill Publishing House

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒழுக்கம் மற்றும் நடத்தை ஆகியவற்றின் பங்கு மிக முக்கியமானது என்கிறார் புத்தகத்தின் ஆசிரியர். சந்திப்புகள், திருமணவிழா, இறுதிச்சடங்கு, ஒருவருடனான முதல் அறிமுகம், உரையாடல்கள், உணவு மேஜை மற்றும் சந்திப்பு போன்றவற்றில் நம்முடைய அணுகுமுறையின் தாக்கத்தைப் பற்றியும், இந்த சூழ்நிலைகளில் நம்முடைய செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப்பற்றியும் சொல்கின்றது இந்த புத்தகம்.

Title: Business Etiquette & Professionalism

Author: M Kay duPont

Publisher: Viva Books Private Limited

தொழில் மற்றும் வேலையில் நமது ஒழுக்கம் மற்றும் பண்பாடு ஆகியவற்றைப்பற்றி பேசுகின்றது இந்த புத்தகம். பணியில், மற்றவருடனான சந்திப்பில், முக்கியமாக வாடிக்கையாளரிடத்தில் நம்முடைய நடத்தையானது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லித் தருகின்றார் ஆசிரியர். பல்வேறு வணிக சூழ்நிலைகளில், எந்தவொரு தருணத்திலும் பயன்படுத்தும்படியான எளிய மற்றும் நேரடி விளக்கத்துடன் வணிக நடத்தை முறைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x