

1835-ம் ஆண்டு முதல் 1910 வரை வாழ்ந்த ஒரு அமெரிக்க எழுத்தாளர், விரிவுரையாளர் மற்றும் சிறந்த நகைச்சுவையாளர் மார்க் டுவெய்ன். இவர் எழுதிய“ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள்” என்னும் நாவல், அமெரிக்காவின் சிறந்த நாவலாக கருதப்படுகிறது.
தான் வளர்ந்த இடமான ஹன்னிபல், மிஸ்ஸௌரி ஆகியவற்றையே, தன் நாவல்களுக்கான களமாக பயன்படுத்திக்கொண்டார். நாவல்கள் மட்டுமல்லாமல் சிறுகதைகள் மற்றும் ஓவியங்களும் இவரது படைப்புகளில் அடங்கும். ஹன்னிபலில் உள்ள இவரின் இளமைகால இல்லம், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
# மனித இனத்திடம் உள்ள ஒரு உண்மையான பயனுள்ள ஆயுதம், சிரிப்பு.
# வாழ்வில் வெற்றி பெற, நமக்கு இரண்டு விஷயங்கள் தேவை; ஒன்று அறியாமை மற்றொன்று நம்பிக்கை.
# ஒரு செயலில் மேல்நோக்கி செல்வதற்கான ரகசியம், முதலில் அதைச் செய்ய தொடங்குவதுதான்.
# சுகாதாரம் தொடர்பான புத்தகங்களை படிக்கும்போது கவனமாக இருங்கள், ஒரு அச்சு பிழை உங்களை மரணத்தை நோக்கி கொண்டுசென்றுவிடும்.
# குருடனால் பார்க்க முடிவதற்கும், செவிடனால் கேட்க முடிவதற்குமான மொழி, கருணையே.
# நாளை மறுநாள் என்ன செய்ய வேண்டும் என்பதை, நாளை வரை தள்ளி வைக்காதீர்கள்.
# உங்கள் கற்பனையின் கவனம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, நீங்கள் உங்கள் கண்களை நம்பியிருக்க முடியாது.
# வயது, ஒரு மனம் சார்ந்த பிரச்சினை, நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை என்றால், அது ஒரு பெரிய விஷயமே இல்லை.
# நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள் மற்றும் ஆழ்ந்த மனசாட்சி; இதுவே சிறந்த வாழ்க்கை.
# உண்மையை மட்டுமே பேசினால், வேறு எதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
# நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த வழி, மற்றவரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பதே.