வெற்றி மொழி - டொனால்ட் டிரம்ப்

வெற்றி மொழி - டொனால்ட் டிரம்ப்
Updated on
1 min read

1946-ம் ஆண்டு பிறந்த டொனால்ட் ஜான் டிரம்ப், அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம். இவர் டிரம்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயலதிகாரியும் கூட. டொனால்ட், அவர் தந்தையின் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து மதிப்புமிக்க மனிதராகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்து வருகிறார். தொழிலில் வெற்றி மற்றும் வளம் பற்றிய இவரின் புத்தகங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

# ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.

# நீங்கள் எப்படியும் யோசித்தேயாக வேண்டும், அதை ஏன் பெரிதாக யோசிக்கக்கூடாது?

# சில நேரங்களில், செயல்களில் தோல்வியடைவதன் மூலமே வெற்றி பெறுவதற்கான ஒரு புதிய வழியை கண்டுபிடிக்க முடிகின்றது.

# ஒவ்வொரு புதிய திருப்பத்திலும், ஒருவன் எவ்வாறு தன்னை பிரதிபலிக்கிறான் என்பதே வெற்றி பெற்றவர்களிடமிருந்து, தோல்வியடைந்தவர்களை பிரித்துக்காட்டுகின்றது.

# மோசமான சூழ்நிலைகளில் மட்டுமே நட்பு உண்மையாக சோதித்துப் பார்க்கப்படுகின்றது.

# தீர்வுகளில் கவனம் செலுத்துவதே முக்கியம்; பிரச்சினைகளில் அல்ல.

# நாம் கடந்த காலத்திலிருந்து நிறைய கற்றுக் கொண்டாலும், நமது நிகழ்காலத்தில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துவதன் மூலமே, எதிர்காலத்தை திட்டமிட முடிகின்றது.

# சில நேரங்களில், உங்கள் சிறந்த முதலீடு என்பது நீங்கள் எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பதே.

# நமது வாழ்க்கையில் உள்ள அனைத்தும் அதிர்ஷ்டமானதே.

# வேலை மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை பேலன்ஸ் செய்ய விரும்புகிறீர்களா, அதற்கு பதிலாக உங்கள் வேலையை மிகவும் மகிழ்ச்சிகரமாக செய்ய ஆரம்பியுங்கள்.

# ஒரு விஷயத்தை, எப்போதும் குறைத்து மதிப்பிடுவதே நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in