

பீட்டர் பெர்டினண்ட் ட்ரக்கர் (Peter F Drucker) மேலாண்மை துறையைச் சார்ந்த புகழ்பெற்ற வல்லுநர். 1909-ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்த இவர், அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். தனது தந்தையின் நண்பரின் மூலம் மேலாண்மை துறையில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது.
மேலாண்மை பற்றிய இவரின் புத்தகங்களும், எண்ணற்ற கட்டுரைகளும் உலகளவில் மிகவும் புகழ்பெற்றவை. பல்வேறு நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தினை வழங்கி பெருமைப்படுத்தின. மேலும், ட்ரக்கரின் கோட்பாடுகள் பல நிறுவனங்களால் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
# எவராலும், கட்டாயப்படுத்தி ஒரு விஷயத்தை மற்றொருவருக்கு கற்றுக்கொடுக்க முடியாது.
# உங்களுக்கு புதிதாக ஏதாவது வேண்டுமானால், நீங்கள் செய்யும் பழைய செயலை முதலில் நிறுத்த வேண்டும்.
# கம்யூனிகேசனில் உள்ள முக்கியமான விஷயம், எது சொல்லப்படவில்லை என்பதை தெரிந்து கொள்வதே.
# பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு இல்லாத இடத்தில், திட்டங்களுக்கு வேலை இல்லை; வெறும் வாக்குறுதிகளும், நம்பிக்கையும் மட்டுமே இருக்கும்.
# ஒரு வணிகத்தின் நோக்கம் வாடிக்கையாளர்களை உருவாக்குவதும், அவர்களை தக்கவைப்பதுமே.
# நல்ல முடிவுகளை எடுப்பது, ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு முக்கியமான திறனாகிறது.
# எதிர்காலம் பற்றி நமக்கு தெரியும் ஒரே விஷயம், அது மாறுபட்டதாக இருக்கும் என்பது மட்டுமே.
# எப்போதெல்லாம் ஒரு வெற்றிகரமான வணிகத்தை பார்கின்றீர்களோ, அங்கு யாரோ ஒருவர் ஒரு தைரியமான முடிவை எடுத்திருக்கின்றார் என்று அர்த்தம்.
# எது அளவிடப் படுகிறதோ, அதுவே செம்மைப்படுத்தப் படுகிறது.