

1930ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டனில் பிறந்த ஜிம் ரோஹன், தொழிலதிபராகவும், பேச்சாளராகவும் மற்றும் தொழில் உலகின் தத்துவஞானியாகவும் விளங்கியவர்.
40 வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் பல கருத்தரங்குகளை நடத்தியுள்ள ஜிம் ரோஹன், தலைமைப் பண்பு, தொழில் திறமை, சுய முன்னேற்றம், வாடிக்கையாளரைக் கையாளுதல் தொடர்பான பல புத்தகங்களை எழுதியிருக்கின்றார்.
2009-ம் ஆண்டு மறைந்த இவரது பேச்சும் கருத்துகளும் மேலாண்மை துறைக்கு மட்டுமல்லாமல் தனிமனித வாழ்க்கைக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளன.
# ஒழுக்கமே, இலக்குகளுக்கும் சாதனைகளுக்கும் இடையேயான பாலமாகும்.
# நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடவில்லை என்றால், வாய்ப்புகள் உங்களை வேறு ஒருவரின் திட்டத்தில் விழ வைக்கும்.
# நீங்கள் அசாதாரணமான ஒரு செயலுக்குத் தயாராகவில்லை என்றால், சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்.
# மகிழ்ச்சி என்பது எதிர்காலத்திற்காக ஒத்திவைக்கும் ஒன்றல்ல, அது நிகழ்காலத்திற்காக உருவாக்க வேண்டிய ஒன்று.
# உங்கள் உடலை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள், அதுவே நீங்கள் வாழ்வதற்கான ஒரே ஆதாரம்.
# நாம் அனைவரும் 2 விஷயங்களில் ஒன்றை அனுபவித்தேயாக வேண்டும், ஒன்று சுயகட்டுப்பாட்டின் வலி அல்லது ஏமாற்றத்தின் வலி.
# வெற்றியானது ஒரு சில எளிய நல்ல பழக்கங்களை ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வதே தவிர வேறொன்றுமில்லை.
# சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது.
# முறையான கல்வி உங்களுக்கு வாழ கற்றுக்கொடுக்கும்; உலகறிவே உங்களை வளமையாக்கும்.
# ஒன்று நாம் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் அல்லது நாட்கள் நம்மை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.
# வாழ்க்கையின் முக்கியமான மதிப்பு, நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதல்ல, நீங்கள் என்னவாக ஆகிறீர்கள் என்பதே.