Published : 29 Dec 2014 12:46 PM
Last Updated : 29 Dec 2014 12:46 PM

வாராக்கடன் - மெகா தள்ளுபடி

இந்தியாவில் மொத்தம் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இவற்றில் 19 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் 6 பாரத ஸ்டேட் வங்கி குழும வங்கிகளும் ஒரு ஐடிபிஐ வங்கியும் அடங்கும். சமீபத்தில் பாரதிய மகிளா வங்கி என்ற பெயரில் மகளிருக்கென வங்கி தொடங்கப்பட்டுள்ளது. 1950-ம் ஆண்டு வங்கிச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், 19 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதாவது 1969-ல்தான் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. வங்கிகளில் அரசின் பங்கு 56 சதவீதம் முதல் 88 சதவீதம் வரை உள்ளது.



$ பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் தொகையில் வாராக் கடன் அளவு 3.73%. பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடன் அளவு 5.17% உள்ளது.

$ வங்கிகள் 1969-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டன. முதலில் 14 வங்கிகளும் அடுத்த சில ஆண்டுகளில் சிலவும் தேசியமயமாக்கப்பட்டன. வங்கிச் சேவை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

$ கடந்த 10 ஆண்டுகளில் வங்கிகள் வாராக் கடனை வசூலிக்க முடியாமல் தள்ளுபடி செய்த தொகை 1,61,081 கோடி ரூபாய். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.27 சதவீதமாகும்.

$ 2000-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக் கடன் 2,04,000 கோடி ரூபாய்.

$ அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 6 மாதங்களில் 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

$ 60 பெரிய நிறுவனங்களுக்கு அளித்து திரும்பாத தொகை 58,000 கோடி ரூபாய்.

$ வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக் கடன் தொகை மூலம் 15,00,000 ஏழைக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி பட்டம் வரை உயர் தர தனியார் பல்கலைக் கழகத்தில் அளிக்க முடியும்.

$ 2013-14-ம் நிதி ஆண்டில் வழங்கப்பட்ட கடன் தொகை 2,36,600 கோடி ரூபாய். வங்கிகள் வசூல் செய்ததோ 30,590 கோடி ரூபாய் மட்டுமே.

$ வாராக் கடன் வழக்கில் மூன்றில் ஒரு பங்கு வழக்குகள் பல்வேறுகட்ட விசாரணையில் நீதிமன்றங்களில் நடைபெறுகின்றன. மொத்த வழக்குகள் 4,085

$ மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 66,921 கோடி ரூபாய் தொகைக்கான 1,000 வழக்குகள் தேங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x