புத்தக அலமாரி - 15/12/2014

புத்தக அலமாரி - 15/12/2014
Updated on
2 min read

Title: Time Management Secrets | Author: Martin Manser | Publisher: HarperCollins Publisher

ஒபாமாவானாலும் சரி ஒண்டுக்குடித்தனத்தில் வாழ்பவரானாலும் சரி எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரம் மட்டுமே இருக்கிறது. இதை வைத்து ஒருவர் ஓஹோ என்று வருவதும், சாமான்யராகவே இருப்பதும் எப்படி? நம்முடைய நேரத்தை புத்திசாலித்தனமாக எப்படி செலவிட வேண்டும் என்ற ரகசியத்தைச் சொல்லும் புத்தகம் இது. உங்களை அறிந்து, உங்கள் வேலையை தெரிந்து, நன்கு திட்டமிட்டு செம்மையாகவும், குழுவோடு இணைந்து பணிபுரிந்து, தெளிவுபடப் பேசினால் நம்முடைய நேரத்தை கைக்குள் வைத்து சிக்கனமாகவும் உபயோகமானதாகவும் செலவழிக்கலாம் என்று சொல்லும் புத்தகம்.

Title: Commonsense Time Management | Author: Roy Alexander | Publisher: Amacom Publishers

உங்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 மணிநேரம் கூடுதலாக வேண்டுமா என்று கேட்கின்றது இந்தப் புத்தகம். ஒருவர் உடனிருந்து சொல்லித்தருவதைப் போல் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் நிறையவே நேர மேலாண்மை குறித்த ஆலோசனைகளைத் தருகின்றது. எப்படி கவனச் சிதறலைத் தவிர்ப்பது, தள்ளிப்போடுவதைத் தவிர்ப்பது, மற்றவர்களுக்கு வேலைகளை ஒதுக்கித்தருவது, கூட்டங்களை ஒதுக்கிய நேரத்திற்குள் சிறப்பாக நடத்துவது என்பதையும் சொல்லும் இந்தப் புத்தகத்தை படிக்காமல் விட்டால்தான் தவறு.

Title: Time Management | Author: Marc Mancini | Publisher: Tata McGraw-Hill

25 வருடங்களுக்கு முன்பை விடவும் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறியுள்ளோம். ஆனால் நமக்கு இன்னமும் நேரம் போதவில்லை என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். நேரத்தை நிர்வகிப்பதில் நீங்கள் எப்படி? உங்கள் பாணி என்ன? அதைப் புரிந்துகொண்டுள்ளீர்களா? அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமலேயே நேர நிர்வாகம் பற்றி பயிற்சிக்கும் புத்தகத்துக்கும் செலவிடுகின்றீர்களா? இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் நேரத்தை தேடாதீர்கள் என்று சொல்லும் புத்தகம்.

Title: Time Management and Personal development | Author: John Adair and Melanie Allen | Publisher: Viva Books Pvt Ltd.

நமக்கு மட்டுமே சொந்தமானது என்று எதுவுமில்லை. நேரத்தைத் தவிர. என்னிடத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்பவரிடம் கூட நேரம் இருகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று சொல்கின்றார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், நீங்கள் யார்? எங்கே இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் போக நினைக்கும் இடத்துக்கு கையில் இருக்கும் நேரத்தில் எவ்வளவு செலவிட வேண்டுமென்று தெரியுமா? எதற்காக வாழ்கின்றோம் என்று முதலில் முடிவு செய்யுங்கள் என்கிறது இந்தப் புத்தகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in