

துபாய் பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டு விமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டில் (2013) விமானத்துறை மூலம் கிடைத்த வருமானம் 2,670 கோடி டாலர். இது அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 27 சதவீதமாகும். வேலை வாய்ப்பு அளிப்பதிலும் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டில் மொத்தமுள்ள வேலைகளில் 21 சதவீத பங்களிப்பு இத்துறையைச் சார்ந்தது.
விமான துறையில் 100 வேலை வாய்ப்புகள் உருவாகிறது என்றால் 116 வேலை வாய்ப்புகளை துபாய் நிறுவனங்கள் உருவாக்குகிறது. விமானத் துறையில் மட்டும் 4.16 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.