

கருப்புப் பணத்தைப் பதுக்குவதில் ஒலிம்பிக் போட்டி வைத்தால் அதில் இந்தியாவுக்குக் கைநிறைய தங்கப் பதக்கம் கிடைக்கும் என்கின்றனர். கருப்புப் பணம் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது ஸ்விட்சர்லாந்துதான்.
இந்தியா மட்டுமல்ல பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் வரி ஏய்ப்பு செய்து கருப்புப் பணமாக பதுக்குவதும் ஸ்விட்சர்லாந்தில்தான். வரி ஏய்ப்பு செய்யும் தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், லஞ்சம் பெறும் ஐஏஎஸ், ஐஆர்எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர் ஸ்விட்சர்லாந்தில் தாங்கள் பெற்ற லஞ்சப் பணத்தை பதுக்கியுள்ளனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைக் கணக்கிட்டால் இந்தியாவை யாருமே ஏழை நாடு என்று கூறமாட்டார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனாலும் எவ்வளவு தொகை பதுக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரம் இதுவரை வெளியாகவில்லை.
$ கடந்த 9 ஆண்டுகளில் (2003-2012) இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட கருப்புப் பணம் ரூ. 27,34,000 கோடி (43,900 கோடி டாலர்கள்).
$ 2012-ம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட தொகை ரூ.5,68,800 கோடி (9,480 கோடி டாலர்கள்).
$ 2003-ம் ஆண்டு கருப்புப் பண இருப்பு 1,000 கோடி டாலர்.
$ 2012-ம் ஆண்டில் கருப்புப் பண இருப்பு 9,480 கோடி டாலர்.
$ சீனா, ரஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகளும் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன. ஆனால் இப்போது மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளி 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா.
$ வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு 7 நிதி ஆண்டுகளுக்கு வரி இல்லாத பட்ஜெட்டை இந்திய அரசால் தாக்கல் செய்ய முடியும்.
$ கருப்புப் பணத்தைக் கொண்டு இந்தியாவின் வெளிநாட்டுக் கடனை ஒரே தவணையில் திருப்பிச் செலுத்தி விட முடியும்.
$ மொத்த தொகை முழுவதையும் கொண்டு வந்தால் 45 கோடி ஏழைகளுக்கு தலா ரூ. 1,00,000 ரொக்கப் பணம் அளிக்கலாம்.
$ மத்திய அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு 600 இந்தியர்கள் ஸ்விஸ் வங்கியில் ரூ. 4,479 கோடி பதுக்கி வைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
$ இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள அளவுக்கு உள்நாட்டிலும் கணக்கில் காட்டப்படாத பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் வருவாய்த்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்விஸ் டிப்ஸ்
$ ஐரோப்பிய நாடுகளில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றுதான் ஸ்விஸ்.
$ மொத்த பரப்பளவில் 10% இடம்தான் மனிதர்கள் புழக்கத்துக்கு ஏற்றதாக உள்ளது.
$ இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 85,00,000
$ ஸ்விஸ் வங்கிகளில் பணம் போடுவோரைப் பற்றிய விவரத்தை அந்த வங்கிகள் வெளியிடாது. இதனால்தான் பல நாட்டினரும் கருப்புப் பணத்தை பதுக்க ஸ்விட்சர்லாந்தைத் தேர்வு செய்கின்றனர்.
$ இந்நாட்டின் பணவீக்கம் கடந்த சில ஆண்டுகளாக 0.07 என்ற அளவிலேயே இருக்கிறது.
$ இந்நாட்டு தொழிலாளர்களில் பெண்கள் 44%
$ நிதி சார்ந்த பணிகளில் 71%
$ உற்பத்தித் துறையில் 27%
$ விவசாயத்தில் 1.3%
$ தனிநபர் வருமானம் 54,600 டாலர்
$ ஒரு மணி நேர ஊதியம் 22 டாலர்.