

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க ஒவ்வொரு துறையிலும் தங்களால் ஆன முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சீமென்ஸ் நிறுவனம் தனது முயற்சியாக மின்சாரத்தால் இயங்கும் கப்பலை இயக்க உள்ளது. மின்சார பேட்டரிகளால் இயங்குவதால் இந்த கப்பல் புகையை வெளியிடாது. சத்தமோ, புகையோ இல்லாத இந்த கப்பல் 2015ஆம் ஆண்டிலிருந்து தனது சேவையை தொடங்க உள்ளது.
வழக்கமான கப்பலின் வேகத்தை விட இந்த கப்பலின் வேகம் அதிகமாக இருக்கும். 6 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் இந்த கப்பல் கடந்து செல்லும். 360 பயணிகளும், 120 கார்களையும் ஒரே நேரத்தில் இந்த கப்பலில் ஏற்றலாம்.