

தட்ப வெப்பத்திலிருந்து நம்மைக் காப்பதில் ஆடைகளுக்கு பெரும் பங்குண்டு. கடும் கோடைக்கு ஏற்றது பருத்தி, அதேபோல் குளிருக்கு ஏற்றது கம்பளி. ஆனால் இப்போது உடல் நலனைப் பற்றி டாக்டருக்கு தகவல் தெரிவிக்கும் ஆடைகளும் தயாராகி வருகின்றன. அணிந்திருக்கும் ஆடையில் உள்ள இழைகள் உங்கள் உடலின் செயல்பாடு மற்றும் மூளையின் செயல்பாடுகளை டாக்டருக்குத் தெரிவிக்கும். இதற்கேற்ப இவை செல்போன் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஆடைகளில் பன்முக தாமிரம், பாலிமர், கண்ணாடி, வெள்ளி இழைகள் உள்ளன.