கபளீகரம்

கபளீகரம்

Published on

கடந்த சில வருடங்களாக மந்தமாக இருந்த நிறுவனங்கள் கையகப்படுத்துதல் நடவடிக்கை கடந்த வாரத்தில் சூடு பிடித்தது. கடந்த வாரத்தில் மட்டும் ஆறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டன.

ரீடெய்ல்

மும்பையை சேர்ந்த பியூச்சர் கன்ஸ்யூமர் என்டர்பிரைஸஸ் நிறுவனம், பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் நீல்கிரிஸ் நிறுவனத்தை வாங்கியது. 300 கோடி ரூபாய் கொடுத்து நீல்கிரிஸை வாங்கியது பியூச்சர் குழுமம்.

வங்கி

ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கோடக் மஹிந்திரா வங்கி வாங்கியது. 1000 ஐஎன்ஜி வைஸ்யா பங்குக்கு 725 கோடக் பங்கு கிடைக்கும். இதன் மூலம் நான்காவது பெரிய தனியார் வங்கியாக கோடக் மாறும். இதன் மதிப்பு 15033 கோடி ரூபாய்.

தகவல் தொழில்நுட்பம்

டெக் மஹிந்திரா நிறுவனம் அமெரிக்காவின் லைட்பிரிட்ஜ் கம்யூனிகேஷன்ஸ் (எல்சிசி) நிறுவனத்தை வாங்கியது. இந்த மதிப்பு ரூ.1486 கோடி, எல்சிசி நிறுவனத்துக்கு 8.5 கோடி டாலர் கடன் இருக்கிறது. எல்சிசி நிறுவனத்துக்கு 5 கண்டங்களில் 5700 பணியாளர்கள் இருக்கிறார்கள்.

மின்சாரம்

ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் 2 நீர் மின் நிலையங்களை வாங்கியது. இதற்காக ரூ.9,700 கோடி செலவிட்டது. ரிலையன்ஸ் பவர் இந்த நிறுவனத்தை வாங்குவதாக இருந்தத திட்டத்தை கைவிட்ட பிறகு ஜே.எஸ்.டபிள்யூ வாங்கியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in