

ஹைதராபாதில் 2 முக்கியமான இடங்கள் உண்டு. ஒன்று சார்மினார். மற்றொன்று சத்யம் கம்ப்யூட்டர்ஸ். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பெயர் மாறியிருந்தாலும் அதன் முன்னாள் நிறுவனர் ராமலிங்க ராஜுவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்திய கார்ப்பரேட் உலகைக் கலக்கிய மிகப் பெரிய நிறுவன மோசடியின் நாயகனாகத் திகழ்கிறார் பி. ராமலிங்க ராஜு.
இவர் எடுத்த தவறான முடிவும், அளவு கடந்த ஆசையும்தான் இந்நிறுவன வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. கடந்த வாரம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிபிஐ தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 23-ம் தேதி வெளியாக உள்ளது.
# ஆந்திர மாநிலத்தில் 1954-ல் பிறந்த ராஜு, விஜயவாடாவில் ஆந்திர லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவிலுள்ள ஒஹையோ பல்கலை.யில் நிர்வாகவியல் பட்டம் பெற்று 1977-ல் இந்தியா திரும்பினார்.
# தனஞ்செய் ஹோட்டல்ஸ், ஆந்திர அரசின் உதவியோடு ரூ. 8 கோடி முதலீட்டில் பருத்தி ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டார். இவையனைத்தும் நஷ்டமடைந்தன. சத்யம் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் சில காலம் ஈடுபட்டார்.
# சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன ஊழியர்கள் மீது போக்குவரத்து போலீஸார் கூட விதிமீறல் குற்றங்களுக்கு வழக்கு பதிவு செய்வதை தவிர்த்தனர். அந்த அளவுக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பிரபலமாகத் திகழ்ந்தது.
# 66 நாடுகளில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கிளை பரப்பியது.
# 20 பணியாளர்களுடன் 1987-ல் மைத்துனர் டிவிஎஸ் ராஜுவுடன் சேர்ந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸை தொடங்கினார்.
# 1991-ம் ஆண்டில் ஜான் டெர்ரீ நிறுவன ஆர்டர் இந்நிறுவனத்துக்குக் கிடைத்தது.
# 1992-ம் ஆண்டில் பொதுப் பங்குகளை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வெளியிட்டது.
# 1999-ம் ஆண்டில் சத்யம் இன்ஃபோவே (சிஃபி) நிறுவனம் தொடங்கப்பட்டு. பின்னர் விற்கப்பட்டது.
# 2001-ம் ஆண்டு நியூயார்க் பங்குச் சந்தையில் இது பட்டியலிடப்பட்டது.
# 2008-ம் ஆண்டு சத்யம் பங்குகளை துணை நிறுவனமான மேடாஸுக்கு விற்க முயற்சித்த போது அதற்கு முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
# 2009-ம் ஆண்டு ஜன.7-ம் தேதி சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன இயக்குநர் குழுவிலிருந்து ராஜிநாமா செய்தார்.
# 2009-ம் ஆண்டு இவர் 2 ஆண்டு 9 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
# 2001-ம் ஆண்டிலிருந்து சொத்து மதிப்புகளை உயர்த்தியதாக 2008-ம் ஆண்டு ஒப்புக் கொண்டார் ராஜு.
# 2011-ம் ஆண்டு உடல் நிலையைக் காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்தார் ராஜு.
# 200கோடி டாலர் நிறுவனமாக வளர்ந்த சத்யம் கம்ப்யூட்டர் ஒரே நாளில் ஒன்றுமில்லாத நிறுவனமானது.
# 2009-ம் ஆண்டு ஏப்ரலில் மஹிந்திரா நிறுவனம் இந்நிறுவனத்தை வாங்கியது.
# 54,000 பணியாளர்களின் நிலை கேள்விக் குறியானது. மத்திய அரசு தலையிட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருள்கள்
$ 321 ஜோடி ஷூக்கள்
$ 310 பெல்ட்கள்
$ 13 கார்கள்
$ 14 லட்சம் டாலர் பெறுமானமுள்ள டெலஸ்கோப்
$ 63 நாடுகளில் வில்லா, சொத்துகள் இவருக்குள்ளன.
# உள்ளூர் கிராம மக்களுக்காக ராஜு தொடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை இப்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.