

1867-ம் ஆண்டு முதல் 1959-ம் ஆண்டு வரை வாழ்ந்த பிராங்க் லாய்டு ரைட் அமெரிக்காவை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர், கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவின் முன்னணி கட்டிடக் கலைஞராக அறியப்பட்டவர்.
வீடுகள் தவிர, புதுமையான அலுவலகங்கள், தேவாலயங்கள், பள்ளிகள், வானளாவிய கட்டிடங்கள், ஹோட்டல்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளும் இவரது சிறப்பான வடிவமைப்புகளில் அடங்கும். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியில் ஈடுபட்டு, இத்துறையில் பெரும் புகழ்பெற்றவராக விளங்கியவர். எழுத்தாளராக, இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
# இயற்கையைப் படியுங்கள், இயற்கையை நேசியுங்கள், இயற்கையோடு நெருக்கமாக இருங்கள். அது உங்களை ஒருபோதும் தோல்வியடையச் செய்யாது.
# நிகழ்காலம் என்பது எப்போதும் நகர்ந்துகொண்டே போகும் நிழல் போன்றது, அது நேற்றைய தினத்திலிருந்து நாளைய தினத்தை பிரிக்கிறது.
# எளிமையும் நிதானமுமே, எந்தவொரு கலைப் படைப்பின் உண்மையான மதிப்பை அளவிடும் குணங்களாகும்.
# கட்டிடங்களும் கூட, பூமி மற்றும் சூரியனின் குழந்தைகளே.
# நமக்கு உள்ளேயிருந்து வருவதே சுதந்திரம்.
# செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மனதின் முக்கிய அம்சம் இதயம் ஆகும்.
# நீங்கள் உண்மையிலேயே நம்புகின்ற ஒரு விஷயம், எப்போதும் நடந்தே தீரும்.
# அதிகமானவை எங்கு நல்லவையாக இல்லையோ, அங்கு மட்டுமே குறைவானவை அதிகமானவையாக உள்ளன.
# தொலைக்காட்சி என்பது கண்களுக்கான சுவிங்கம் போன்றது.
# சகிப்புத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகியன ஒரு சிறந்த குடியரசின் அடித்தளங்கள் ஆகும்.
# இளமை என்பது வயது சார்ந்த விஷயம் அல்ல. அது ஒரு குணம்.
# ஒரு மனிதனின் கலாசாரத்தின் அளவீடு என்பது அவனது பாராட்டுக்கான அளவீடு ஆகும்.