வெற்றி மொழி: ஜான் டெவே
1859-ம் ஆண்டு முதல் 1952 -ம் ஆண்டு வரை வாழ்ந்த ஜான் டெவே அமெரிக்க தத்துவஞானி, உளவியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதி. புத்தகங்கள், கட்டுரைகள் என கல்வி பற்றிய பல்வேறு சிறந்த படைப்புகளைக் கொடுத்துள்ளார். மேலும், அறிவியலியல், அழகியல், கலை, தர்க்கம், சமூக கோட்பாடு மற்றும் நெறிமுறைகள் உட்பட பல்வேறு தலைப்புகளிலும் இவரது படைப்புகள் அடங்கும். கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்தில் இவரது கருத்துக்கள் பெரும் செல்வாக்குப் பெற்றவையாக விளங்கின. செயல்பாட்டு உளவியலின் தலைசிறந்த முன்னோடிகளில் ஒருவராகவும், இருபதாம் நூற்றாண்டின் சிறந்த உளவியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.கல்வி என்பது வாழ்க்கைக்கான முன்னேற்பாடு அல்ல; கல்வி என்பதே வாழ்க்கைதான்.
# ஓர் இலக்கை அடைவது என்பது மற்றொரு இலக்கிற்கான தொடக்கப்புள்ளி ஆகும்.
# சில நேரங்களில் ஒரு மாற்றாந்தாய் மற்றும் அன்பில்லாத வீடு போல இருந்தாலும்கூட, இயற்கையே மனிதனின் தாய் மற்றும் வாழ்விடம்.
# எப்போது நாம் பிரச்சினைகளை சந்திக்கிறோமோ அப்போது மட்டுமே நாம் சிந்திக்கிறோம்.
# அறிவியலின் ஒவ்வொரு பெரிய முன்னேற்றமும், கற்பனையின் துணிவிலிருந்து வழங்கப்படுகிறது.
# என்ன செய்வதென்று தெரிந்துகொள்வது மற்றும் அதை செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவது ஆகியன மகிழ்ச்சிக்கான திறவுகோல்.
# சில இலக்குகளும், அதை அடைய சில முயற்சிகளும் இல்லாமல் எந்த மனிதனும் வாழமுடியாது.
# என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை என்பது கவலைப்படாமல் இருப்பது.
# நன்றாக வரையறுக்கப்பட்ட ஒரு பிரச்சினை பாதி முடிக்கப்பட்டதற்கு சமம்.
# தனிநபர்கள் தங்கள் கல்வியை தொடர உதவுவதே கல்வியின் இலக்கு.
# ஆச்சரியமே அனைத்து விஞ்ஞானங்களுக்கும் தாய்.
# நம்மால் ஒருவனை சிறைச்சாலைக்குள் அடைக்க முடியுமே தவிர, நம்மால் அவனை மனம்திருந்த வைக்க முடியாது.
# பள்ளிக்கூடம் வாழ்க்கையைப் பிரநிதித்துவம் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
