அதிக வங்கி கணக்குகள் இருப்பதால் நன்மையா?

அதிக வங்கி கணக்குகள் இருப்பதால் நன்மையா?
Updated on
2 min read

நம்மில் பலர் நிறைய சேமிப்பு வங்கி கணக்குகளை வைத்திருப்பது இயல்பு. சம்பள வங்கி கணக்கில் ஜீரோ இருப்பு தொகையுடன் எத்தனை பரிவர்த்தனைகள் மேற்கொண்டாலும் எந்தவித கட்டணமும் விதிக்கப்படுவ தில்லை. ஆனால் நம்மிடையே ஒரு சம்பள வங்கி கணக்கு மட்டுமே இருக்கும். மற்றவை சாதாரண வங்கி கணக்குகளாக இருக்கும். ஒரு தனிநபர் பல்வேறு சேமிப்பு வங்கி கணக்குகள் வைத்திருப்பது உங்களது செலவை கூடுதாலாக்கும். அது எப்படி என்று பார்ப்போம்.

நாம் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும் பொழுது நம்முடைய முந்தைய சம்பள வங்கி கணக்கை தக்கவைத்துக் கொள்கிறோம். மேலும் அதை சாதாரண சேமிப்பு வங்கி கணக்காக மாற்றிக் கொள்கிறோம். ஆனால் சம்பள வங்கி கணக்கோடு சாதாரண வங்கி கணக்கை ஒப்பிடுகையில் பல்வேறு சேவைகள் இலவசமாக கிடைக்கின்றன. குறிப்பாக பல்வேறு பரிவர்த்தனைகளை மேற் கொள்ள முடியும். கூடுதலான காசோலை படிவங்கள் கிடைக்கும், ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த சேவை கள் எல்லாம் இலவசமாக கிடைக்கின் றன. ஆனால் சாதாரண சேமிப்பு வங்கி கணக்கில் இந்த சேவைக்களுக்கெல் லாம் கட்டணம் விதிக்கப்படும்.

என்இஎப்டி முறையில் ரூ.10,000 பரிவர்த்தனையை செய்தால் 2.5 ரூபாயை பரிவர்த்தனை கட்டணமாக பெரும்பாலான வங்கிகள் விதிக்கின் றன. ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 5 ரூபாயை கட்டணமாக விதிக்கின்றன. சேவை வரி கட்டணங்களும் இந்த பரிவர்த்தனைக்கு உண்டு. உதாரணமாக சேமிப்பு வங்கி கணக்கிற்கு ஒரு காலாண்டுக்கு ஐசிஐசிஐ வங்கி இலவசமாக 20 காசோலைகளை வழங்குகிறது. 20க்கு மேல் ஒவ்வொரு காசோலை புத்தகத்திற்கும் 20 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது. ஆனால் ஐசிஐசிஐ வங்கியில் சம்பள வங்கி கணக்குக்கு எத்தனை காசோலை படிவங்களையும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

ஹெச்டிஎப்சி வங்கியில் சம்பள வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு 25,000 ரூபாய் வரையில் இலவசமாக டிமாண்ட் டிராப்ட் வழங்கப்படுகிறது. இருப்பினும் சாதாரண சேமிப்பு வங்கி கணக்கில் 10,000 ரூபாய் வரையில் டிமாண்ட் டிராப்ட் வழங்குவதற்கு 50 ரூபாய் கட்டணமாக விதிக்கப்படுகிறது. அதன்பிறகு கூடுதலாக ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 5 ரூபாய் கட்டணமாக விதிக்கப்படுகிறது.

பெரும்பாலான சம்பள வங்கி கணக்குகள் ஜீரோ இருப்புத் தொகை யாக வைத்துக் கொள்ளமுடியும். ஆனால் சாதாரண சேமிப்பு வங்கி கணக்குகளில் நீங்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்வகிக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை வங்கிகளை பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை உள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்வகிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. மெட்ரோ நகரத்தில் உள்ள சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு ஆக்ஸிஸ் வங்கியில் மாதத்திற்கு சராசரி இருப்புத் தொகை யாக 10,000 ரூபாய் இருக்கவேண்டும். இல்லையென்றால் குறையும் ஒவ் வொரு 100 ரூபாய்க்கும் 10 ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.

கட்டணங்கள் பிடித்தம்

நீங்கள் பணியிடம் மாறும் பொழுது உங்களுடைய புதிய சம்பள வங்கி கணக்கிலிருந்து பணத்தை பழைய வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ளமுடியும். அதன்பிறகு உங்களுடைய அன்றாட வங்கி செயல்பாடுகளை அந்த பழைய வங்கியிலிருந்து மேற்கொள்ள முடியும். இதற்கு இன்னொரு வழிமுறையும் உண்டு. கடன் கட்டுவதும் பிற கட்ட ணங்கள் செலுத்துவது போன்றவற்றை இதிலிருந்து மேற்கொள்ள முடியும். அப்படி செய்வது சிரமம் என்றால் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.

உதாரணமாக உங்கள் வங்கி கணக்கிலிருந்து மாத மாதம் தானாக எடுக்கப்படும் தொகையை (ஆட்டோ டெபிட்ஸ்) புதிய சம்பள வங்கி கணக்குக்கு மாற்றம் செய்து விடலாம். ஆனால் மற்ற கட்டணங்கள் செலுத்துவது தொடர்பான முறைகளை புதிய சம்பள கணக்குக்கு மாற்றுவதற்கு சிறிது காலம் ஆகும். ஆனால் ஒரு முறை மாற்றம் செய்துவிட்டால் நீங்கள் செலுத்த வேண்டிய எந்தவொரு கட்ட ணத்தையும் மறக்காமல் செலுத்திவிட முடியும்.

``புதிய வங்கிகளான ஐடிஎப்சி மற்றும் டிபிஎஸ் போன்றவை எந்தவொரு கட்டணமும் இல்லாமல் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. ஐடிஎப்சியில் ஆன்லைன் மூலமாக சேமிப்பு வங்கி கணக்கை தொடங்க முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த வங்கி எந்தவொரு பரிவர்த்தனை கட்டணமும் விதிப்பதில்லை. டிபிஎஸ் வங்கியும் இதுபோன்ற சேவையை வழங்குகிறது’’ என்று பைசாபஸார் டாட் காம் நிறுவனத்தின் பேமெண்ட் புராடெக்ட் தலைவர் சஹில் அரோரா தெரிவித்தார்.

ஆனால் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்குகள் மூலம் வரும் கட்டணங்களை குறைக்க மாற்று கணக்குகளுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகளை வாங்க வேண்டிய தேவையில்லை. டெபிட் கார்டை பயன்படுத்தியதிலிருந்து உங்களுக்கு கட்டணம் விதிக்க வாய்ப்பிருக்கிறது என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மாற்று வங்கி கணக்கு தொடங்க வேண்டுமென்றால் எந்தவொரு கட்டணமும் விதிக்காத பூஜ்ய இருப்புத் தொகை சலுகை வழங்கும் வங்கிகளில் தொடங்கவேண்டும். தற்போது பல்வேறு வங்கிகள் இதுபோன்ற சலுகைகளை வழங்குகின்றன. இது போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தேவைக்கு ஏற்ப வங்கி கணக்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகபட்சமாக இரண்டு வங்கி கணக்கு களை வைத்துக் கொள்ளலாம். அதிலும் சலுகைகளை வழங்கும் வங்கிகளில் கணக்கை நிர்வகிக்க வேண்டும். இதுபோல் இருந்தால் தேவையில்லாத கட்டணங்களை தவிர்க்க முடியும்.

- gurumurthy.k@thehindu.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in