வெற்றி மொழி: சைமன் சினக்

வெற்றி மொழி: சைமன் சினக்
Updated on
1 min read

1973 ஆண்டு பிறந்த சைமன் சினக் ஆங்கில எழுத்தாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மார்க்கெட்டிங் ஆலோசகர். வணிகம், நிறுவனம் மற்றும் தலைமை பண்பு ஆகியவற்றின் மீதான இவரது புதுமையான பார்வை இவருக்கு சர்வதேச கவனத்தைப் பெற்றுத்தந்தது. இதன்மூலம் உலகளவிலான மாநாடுகள் மற்றும் நிறுவன கூட்டங்களில் இவரது கருத்துகள் தனிச்சிறப்பினைப் பெற்றுள்ளன. விற்பனையில் பெரும் சாதனை படைத்து, சிறந்த விற்பனையாளர் பட்டியலில் இடம்பிடித்த ``ஸ்டார்ட் வித் ஒய்’’ உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

# தலைமை என்பது அடுத்த தேர்தலைப் பற்றியது அல்ல, அது அடுத்த தலைமுறையைப் பற்றியது.

# உங்களது கனவு அல்லது இலக்கை உங்களால் தெளிவாக செயல்படுத்த முடியுமானால், தொடங்கி விடுங்கள்.

# வெற்றிகரமாக இருப்பது மற்றும் வெற்றிகரமாக உணர்வது ஆகியவற்றிற்கு இடையே வித்தியாசம் இருப்பதை நான் உணர்கிறேன்.

# ஒரு தலைவரது தரத்தை அவரது பதில்களின் மூலம் மதிப்பிட முடியாது, அவரால் கேட்கப்படும் கேள்விகளின் மூலமே மதிப்பிட முடியும்.

# தலைமையானது முற்றிலும் எழுச்சியூட்டும் நடவடிக்கை பற்றிய விஷயம்.

# ஒரு தலைவனது பணி மற்றவர்களுக்காக வேலை செய்வது அல்ல, அந்த வேலையை அவர்களே செய்துகொள்வதற்கான வழியைக் கண்டறிய உதவுவது.

# ஒரு நல்ல பெற்றோர் தனது குழந்தையின் சிறந்த நண்பராக இருக்க முடியாதது போல, அதிகாரம் கொண்ட ஒரு தலைவருக்கு கீழ்நிலை நபர்களிடமிருந்து சில பிரிப்பு தேவைப்படுகிறது.

# வார்த்தைகளை விட செயல்பாடுகள் அதிக வலிமை வாய்ந்தவைகளாக உள்ளன.

# நம்மில் ஒவ்வொருவருக்கும் தலைமைக்கான திறன் உள்ளது.

# தலைமை என்பது ஒரு சிந்திக்கும் முறை, செயல்பாட்டு முறை மற்றும் மிக முக்கியமாக, ஒரு தொடர்புகொள்ளும் முறை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in