பரபரப்பாகும் வான்வெளி

பரபரப்பாகும் வான்வெளி
Updated on
2 min read

இந்திய வான்வெளி முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு விமான சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தவிர சர்வதேச அளவில் உள்நாட்டு விமான போக்குவரத் தில் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கிறது. இந்திய சந்தையை கைப்பற்ற பல நிறுவனங்களும் முயன்று வருகின்றன. இதில் சில முயற்சிகள் தோல்வியடைந்தாலும், புதிய முயற்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு போக்கு வரத்தை தொடங்க இருப்பதாக அறிவித்தது. இதற்கான வேலை களை அந்த நிறுவனம் தொடங்கி இருக்கிறது. பெங்களூருவை தலை மையிடமாகக் கொண்டு செயல்பட கத்தார் ஏர்வேஸ் முடிவெடுத்திருக் கிறது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருக்கும் முக்கியமான விமான நிலையங்களில் கத்தார் ஏர்வேஸ் குழு சென்று ஆய்வு நடத்தி யுள்ளது. ஆனால் விமான நிலை யங்களில் ஆய்வு குறித்து கத்தார் ஏர்வேஸ் முறையான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக முக்கியமான நாடுகளின் விமான சந் தையில் கத்தார் ஏர்வேஸ் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இத் தாலியை சேர்ந்த மெரிடியானாவில் 49% பங்குகளை இந்த நிறுவனம் வைத்திருக்கிறது. சிலியை சேர்ந்த லதம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 10% பங்குகளை வைத்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய நிறுவனம் செயல்படத்தொடங்கும் என தெரிகிறது.

ஏற்கெனவே இந்திய உள்நாட்டு போக்குவரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் அபுதாபியை சேர்ந்த எதியாட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. ஜெட் ஏர்வேஸில் 24 சதவீத பங்குகள் எதியாட் வசம் இருக்கின்றன. அதேபோல ஏர் ஏசியா இந்தியாவில் 49 சதவீதம் ஏர் ஏசியா வசம் இருக்கிறது.

கத்தார் ஏர்வேஸ் இந்தியாவில் தொடங்க இருப்பதாக அறிவித்த ஒரு வாரத்தில் இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்குவது என்பது துரதிஷ்டவசமானது என ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் செயல்பாட்டு கட்ட ணங்கள் மிக அதிகம். இந்த நிலை யில் இந்தியாவில் விமான நிறுவனம் தொடங்கும் திட்டம் இல்லை என லுப்தான்சாவின் தெற்காசிய பிரிவு இயக்குநர் வோல்ப்காங் வில் தெரிவித்தார்.

இந்தியாவில் எரிபொருள் கட்டணம் அதிகம், வரிகள் அதிகம் அதனால் இங்கு (இந்தியாவில்) தொடங்குவது துரதிஷ்டவசமாகவே முடியும். இந்தியாவில் எந்த விமான நிறுவனமும் லாபமீட்டுவதாக எனக்கு தெரியவில்லை என்றும் வில் கூறினார்.

மோடிலுப்ட் என்னும் நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் லுப்தான்சா நிறுவனத் தின் முதலீடும் இருந்தது. ஆனால் 1996-ம் ஆண்டு பல சிக்கல்களால் செயல்படவில்லை. இந்த நிறுவனத் துக்காக வாங்கப்பட்ட உரிமையில் தொடங்கப்பட்டதுதான் ஸ்பைஸ் ஜெட் என்பது வரலாறு.

2030-ம் ஆண்டு உலகின் முக்கிய மான விமான சந்தையாக இந்தியா இருக்கும் என்பது கணிப்பு. அதனால் கடந்த இரு ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விமான போக்குவரத்துக்காக விண்ணப்பித் திருக்கின்றன. இந்த நிலையில் மண்டல விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியில் விரைவில் பறக்க இருக்கிறது.

கத்தார் கணிப்பு சரியா அல் லது லுப்தான்சா கணிப்பு சரியா? காலத்தின் முடிவுக்காக காத்திருப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in