

0.01 மைக்ரான் துகள் மாசுக்களை கூட தூய்மைப்படுத்தும் இந்த காற்று சுத்திகரிப்பான், தண்ணீர் பாட்டில் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. வேலை செய்யும் இடம், தூங்கும் இடம், பயணத்தின் போதும் எடுத்துச் செல்லலாம்.
நனையாத கூடு
பாலி எத்திலீன் பைபரைக் கொண்டு இந்த கூடு உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, பயணத்தின் போது எடுத்துச் செல்வதற்கு ஏற்ப எடை குறைவாக இருக்கும். பனி பிரதேசங்களில் கூட பயன்படுத்தலாம். இரண்டு நபர்கள் இதில் உறங்க முடியும்.
ஸ்மார்ட் செடி
தொட்டியில் செடியை நட்டு, பின்பு தொட்டியின் கீழ் உள்ள குடுவையில் தண்ணீர் ஊற்றி விட்டால் போதும் குழாய் வழியாக நீர் மேலே செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்ளலாம்.