

1911 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரொனால்ட் ரீகன் அமெரிக்க முன்னாள் அதிபர் மற்றும் நடிகர். கலிபோர்னியாவின் முப்பத்து மூன்றாவது கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவின் நாற்பதாவது அதிபராக தனது அறுபத்து ஒன்பதாவது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க அதிபர்களில் வயதில் மிகவும் மூத்தவர் இவரே. தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாக ஹாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகராகவும் இருந்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் நூறு முக்கிய நபர்களின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
# அமைதி என்பது மோதல் இல்லாத நிலை அல்ல, அது அமைதியான வழிமுறைகளில் மோதலைக் கையாளும் திறன்.
# கருவிலிருக்கும் குழந்தையின் வாழ்வைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கின்றது.
# வளர்ச்சிக்கான வரம்புகள் எதுவுமில்லை, ஏனென்றால் மனித அறிவாற்றலுக்கான வரம்புகள் எதுவுமில்லை.
# தனது எல்லைகளை கட்டுப்படுத்த முடியாத ஒரு நாடு, நாடே அல்ல.
# நம்பிக்கை வையுங்கள், ஆனால் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
# உண்மைகள் என்பவை உறுதியான விஷயங்கள்.
# நம்மால் எல்லோருக்கும் உதவி செய்ய முடியாது, ஆனால் எல்லோரும் யாரோ ஒருவருக்கு உதவ முடியும்.
# நாம் இல்லையென்றால், யார்?. இப்போது இல்லையென்றால், எப்போது?
# அரசின் முதல் கடமை மக்களைப் பாதுகாப்பதே, அவர்களின் வாழ்க்கையை நடத்துவது அல்ல.
# நாம், நம் நாட்டை நேசிக்கிறோம் என்றால், நம் நாட்டு மக்களையும் நேசிக்க வேண்டும்.
# உங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தால் உங்களால் முடியும்.
# குடும்பங்களே நமது சமூகத்தின் மையப் புள்ளியாக விளங்குகின்றன.
# நல்லவை துணிவுள்ளவையாக இருந்தால், தீயவை பலவீனமானதாக இருக்கும்.
# தகவல்கள் என்பவை நவீன காலத்தின் ஆக்சிஜன் போன்றவை.