வெற்றி மொழி: புரூஸ் லீ

வெற்றி மொழி: புரூஸ் லீ
Updated on
1 min read

1940-ம் ஆண்டு முதல் 1973-ம் ஆண்டு வரை வாழ்ந்த புரூஸ் லீ என்னும் லீ ஜூன்ஃபேன் ஹாங்காங் மற்றும் அமெரிக்க தற்காப்பு கலைஞர் மற்றும் நடிகர். சிறுவயதிலேயே படிப்பை விட தற்காப்பு கலையையும் சினிமாவையுமே அதிகமாக நேசித்தார். திரைப்படங்களின் வாயிலாக தற்காப்புக் கலைக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர். அதன்மூலம் உலக இளைஞர்களைத் தனி மனிதனாக தற்காப்புக் கலையின் பக்கம் திருப்பியவர். பிரமிக்கத்தக்க வகையில் சண்டையிடும் தனது திறமையால், அனைத்து காலங்களுக்குமான மிகவும் செல்வாக்குடைய தற்காப்பு கலைஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

# எப்போதும் நீங்களாகவே இருங்கள், உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

# அறிவு உங்களுக்கு ஆற்றலை ஈட்டித்தரும், குணம் உங்களுக்கு மரியாதையை ஈட்டித் தரும்.

# ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க நீங்கள் அதிகப்படியான நேரத்தை செலவிட்டால், நீங்கள் ஒருபோதும் அதை செய்துமுடிக்கப் போவதில்லை.

# யார் சரி அல்லது யார் தவறு அல்லது யார் சிறந்தவர் என்பதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டாம்.

# விவேகமான பதிலிலிருந்து ஒரு முட்டாள் கற்றுக்கொள்வதை விட, முட்டாள்தனமான கேள்வியிலிருந்து விவேகமான மனிதன் அதிகம் கற்றுக்கொள்ள முடியும்.

# எளிமையான வாழ்க்கைக்காக வேண்டிக்கொள்ளாதீர்கள், கடினமான வாழ்க்கையை சமாளிக்கத் தேவையான வலிமைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

# தவறுகளை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தால், அவை எப்பொழுதும் மன்னிக்கக் கூடியவையே.

# நீங்கள் வாழ்க்கையை நேசித்தால், நேரத்தை வீணடிக்காதீர்கள்.

# நீங்கள் நினைப்பது போலவே, நீங்கள் உருவாகுகிறீர்கள்.

# உண்மையான வாழ்க்கை என்பது மற்றவர்களுக்காக வாழ்வது.

# ஒரு விரைவான கோபம், வெகு சீக்கிரமாக உங்களை முட்டாளாக மாற்றிவிடும்.

# நாளைய பொழுதிற்கான தயாரிப்பு என்பது இன்றைய கடின உழைப்பே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in