

ட்ரம்ப் அதிபராக வந்தால் என் னென்ன மாற்றங்கள் நிகழும் என்று ஊடகங்கள் எழுதினவோ அவையெல்லாம் அச்சு பிசகாமல் ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் ஈரான், இராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்களுக்கு விசா தடை விதித்தார். அதுமட்டுமல் லாமல் சிரியா அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய நிரந்தர தடையை விதித்தார். இது மிகப் பெரிய கொந் தளிப்பை ஏற்படுத்தியது.
அடுத்ததாக இந்தியா உட்பட வெளிநாட்டினர் பணி நிமித்தமாக அமெரிக்கா செல்வதற்கு வழிவகை செய்யும் ஹெச்1பி முறையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான சீர்திருத்த வரைவு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதிபர் ட்ரம்பின் பாதுகாப்புவாத முடிவுகளால் மக்களை விட நிறுவனங்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிறுவனங்கள் அமைதியாக இல்லாமல் ட்ரம்புக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தியுள்ளன. அதிலும் குறிப்பாக சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய நிறுவனங்கள் ட்ரம்பின் உத் தரவை எதிர்க்கவும் அகதிகளுக்கு உதவவும் நிதி திரட்ட ஆரம்பித்து விட்டன.
40 லட்சம் டாலர் திரட்டிய கூகுள்
அகதிகள் அமெரிக்கா வுக்குள் நுழைய தடை என்று ட்ரம்ப் அறிவித்ததற்கு முதலில் எதிர்ப்பை பதிவு செய்த நிறுவனம் கூகுள். மவுன்டெய்ன் வியூ, நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில் ஆகிய இடங்களில் உள்ள கூகுள் அலுவல கத்தில் பணிபுரியும் சுமார் 2,000-த் துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ட்ரம்பின் உத்தரவை எதிர்த்து போராட் டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல் லாமல் போராட்டத்தில் கலந்து கொண்ட கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக போராடுவோம் என்று தெரிவித்தார். அதுமட்டுமல் லாமல் ட்ரம்ப் உத்தரவால் பாதிக் கப்படுபவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக 40 லட்சம் டாலர் நிதியை திரட்டியுள்ளது. இதில் 20 லட்சம் டாலர் கூகுள் நிறுவனமும் 20 லட்சம் டாலர் கூகுள் நிறுவன ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
15 லட்சம் டாலர் திரட்டிய ட்விட்டர்
சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக போராடுவதற்கும் அகதிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கும் 15 லட்சம் டாலர் நிதி திரட்டியுள்ளது. நிறுவனத் தின் சிஇஓ ஜாக் டோர்ஸி மற்றும் 1,000 ஊழியர்கள் சேர்ந்து இந்த நிதியை நன்கொடையாக வழங்கியுள் ளனர். ட்ரம்ப் தடை விதித்த சில நாட்களில் அமெரிக்க சிவில் லிபர்டி யூனியனுக்கு 2.4 கோடி டாலர் நன்கொடை வந்துள்ளது. நன்கொடை வசூல் செய்யும் நிறுவனங்களும் இந்த அமைப்புக்கு நிதி வழங்குகின்றன. இந்த அமைப்பு தொடர்ந்து ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக போராடி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 அகதிகளை பணியில் அமர்த்த போவதாக கூறி எதிர்ப்பை பதிவு செய்தது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அமெரிக்க தேர்தலின் போதே ட்ரம்பை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர். மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர் பெர்க், டெஸ்லா, ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் ட்ரம்பை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ட்ரம்பின் பொருளாதார ஆலோசனை குழுவில் இருந்து உபெர் நிறுவனத்தின் சிஇஓ டிராவிஸ் கலாநிக் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இப்படி ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு வகைகளில் எதிர்ப்பை பலப்படுத்திவருகின்றன. ட்ரம்ப் சமாளிப்பாரா?