

இந்தியப் பொருளாதாரத்தை புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதற்கு முன் பின் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவைக் கட்டமைத்த நேரு, தொழில் வளர்ச்சிதான் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் என்று தொழில்சாலைகளை தொடங்கினார். சோஷலிச பொருளாதார கொள்கைகளை நேரு நடைமுறைப்படுத்தினார். அரசு சார்ந்த துறைகள்தான் பெரும்பாலும் துவங்கப்பட்டன. இது வளர்ச்சிக்கு வித்திட்டாலும் 1990-களில் இந்தியாவில் மிகப் பெரிய பொருளாதார சீரழிவு ஏற்பட்டது.
சிக்கலுக்கு அரசியல் காரணங்கள் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் சரிவை கண்டது. புதிய பொருளாதார கொள்கைகளை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அப்போதைய சிக்கலைத் தவிர்ப்பதற்கு நரசிம்ம ராவ் தலைமையில் ஒரு குழு செயல்பட்டது. உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் அக்குழுவில் இருந்தனர். மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா, ப.சிதம்பரம் என பல்வேறு நபர்கள் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இந்த சீர்திருத்த நாயகர்கள் பற்றிய சில தகவல்கள்….
* நவீன இந்தியாவின் பொருளாதார தந்தை.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த மன்மோகன் சிங் டெல்லி ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸில் பேராசிரியராக பணியாற்றியவர்.
* அதன் பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர், தலைமை பொருளாதார ஆலோசகர், திட்டக் குழு துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
* 1991-ம் ஆண்டு பொருளாதார சிக்கலைக் கையாளுவதற்காக மன்மோகன் சிங்கை நரசிம்ம ராவ் நிதியமைச்சரா க்கினார்.
* இவர் பதவியேற்கும் போது மொத்த ஜிடிபியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருந்தது. இரண்டு வார கால இறக்குமதிக்கு மட்டும் செலுத்து வகையில் தான் அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்தது. நிதிப்பற்றாக்குறை 8.5 சதவீதத்தைத் தொட்டிருந்தது.
* அந்நிய செலாவணி நிதியத்தின் ஆலோசனையின் படி லைசன்ஸ் ராஜ் தடை செய்தார். `பரிமிட் ராஜ்’ முறையை எடுத்தது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பட்ஜெட்டில் கொண்டு வந்தார்.
* 1992-97ல் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர். அதற்கு முன் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவியில் இருந்தவர்.
* அந்நிய செலாவணி மாற்று விகிதத்தில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்து புதிய அறிக்கையை தாக்கல் செய்தார். நவீன வங்கி முறைகளை இவர் உருவாக்கினார்.
*ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர். 1985-ம் ஆண்டிலிலிருந்து இந்திய பொருளாதார ஆலோசகராக இருந்தவர்.
* புதிய பொருளாதார கொள்கைகளை நடைமுறைப் படுத்தியதில் இவருடைய பங்கு அளப்பரியது. பொருளாதார சீர்திருத்தத்தின் போது முக்கிய பேரியல் பொருளாதாரக் கொள்கைகளை கொண்டுவந்தவர்.
* ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர்.
* 1987-ம் ஆண்டு இவர் தலைமையிலான குழு பணச் சந்தையை வளர்ச்சியடைய செய்வது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது. பல்வேறு புதிய நிதிக் கொள்கைகளை இவர் பரிந்துரை செய்துள்ளார்.
* அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர்.
* 1991-ம் ஆண்டு பொருளாதார சூழ்நிலையின் போது இந்திய வரி முறைகளை மாற்றி அமைக்க இவரது தலைமையில் வரி சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
* இந்திய வரி முறைகளை எளிதாக்கியதில் இவருடைய பங்கு பெரியது. இந்திய நேரடி வரிச் சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப் படுகிறார்.
* 1921-ம் ஆண்டு தெலுங்கானாவில் பிறந்த நரசிம்ம ராவ் வழக்கறிஞர் படிப்பை முடித்தவர். இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
* இந்திராகாந்தி அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த ராவ், 1991- ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி இந்தியா மிகப் பெரிய பொருளாதார சிக்கலில் இருந்த போது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
* 1991 வரை சோஷலிச கொள்கைகளை பின்பற்றி வந்த இந்தியாவை திறந்த பொருளாதார பாதைக்கு அழைத்துச் செல்லும் பெரும் பணியை அவர் ஏற்றுக் கொண்டார்.
* அரசு கட்டுப்பாட்டில் இருந்தால் தொழில் நிறுவனங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது என்பதை உணர்ந்த ராவ், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது போன்ற கொள்கைகளை இலக்காக கொண்டு செயல் பட்டார்.
* நவீன இந்தியாவின் சாணக்கியர் என போற்றப் படுபவர்.
* ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துள்ள ப.சிதம்பரம் முக்கிய பொருளாதார அறிஞர்களில் ஒருவர்.
* 1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வரும் பொழுது வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தவர்.
* இறக்குமதி செய்வதற்கான விதிமுறை களை மாற்றியமைத்தார். மிக எளிய கொள்கைகளை கொண்டுவந்தார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிர்வகிக்க இயக்குநர் ஜெனரல் என்ற புதுப் பதவியை ஏற்படுத்தினார்.
* ஆக்ஸ்போர்டு கல்லூரியில் பொருளாதாரம் படித்த மாண்டேசிங் அலுவாலியா உலக வங்கியில் பணியாற்றியவர்.
* 1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்கள் அமல் படுத்தப்பட்ட போது வர்த்தகத் துறை செயலாளராக இருந்தவர். ப.சிதம்பரத்தின் கீழ் இயங்கியவர்.
* புதிய தொழிற் கொள்கைகளை வடிவமைத்ததில் மிக முக்கிய பங்காற்றியவர். பிராட்பேண்ட் லைசன்ஸ் முறையை கொண்டுவந்தவர்.