

உங்களிடம் கொஞ்சம் வசதி இருக்கிறது. சொகுசு காரை வாங்க விரும்புகிறீர்கள். 4 லட்சம் டாலர் கொடுத்தால் ரோல்ஸ் ராய்ஸ் டான் மாடல் கார் கிடைக்கும். நீங்கள் எதையும் வித்தியாசமாக சிந்திக்கும் கோடீஸ்வரராக இருந்தால் இதே விலைக்கு பறக்கும் காரை வாங்கலாம். ஆம், ஹாலந்தைச் சேர்ந்த நிறுவனம் பறக்கும் காருக்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது.
வழக்கமாக திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட் 007-ன் கார் திடீரென பறந்து செல்லும், அல்லது தண்ணீரில் படகு போல சீறிப் பாய்ந்து கரையேறும்.
ஆனால் நீங்கள் பயணிக்கும் காரே வானில் பறந்தால் எப்படியிருக்கும். அத்தகைய அனுபவத்தை அளிக்கிறது டச்சு நிறுவனமான பிஏஎல்-வி. இந்த நிறுவனத்தின் பறக்கும் காரின் பெயர் `பால் வி லிபர்டி’. அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கியதாக இந்த கார் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்பு சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இப்போது முன்பதிவு செய்வோருக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெலிவரி செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பறக்கும் காரைத் தயாரிக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் பன்னெடுங் காலமாக ஈடுபட்டு வந்துள்ளன. ஆனால் இந்நிறுவனம் தனது தயாரிப்பை முதலில் சந்தைப்படுத்த உள்ளது.
முதல் கட்டமாக 90 சிறப்பு பறக்கும் கார்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இதன் மேற்புற வடிவமைப்பு, உள் பகுதியில் சிறப்பம்சங்கள் கொண்டதாக இது இருக்கும். இதன் விலை 6 லட்சம் டாலராகும். அடுத்தாக 4 லட்சம் டாலரில் வழக்கமான மாடல் பறக்கும் கார்களைத் தயாரிக்கப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக 90 சிறப்பு பறக்கும் கார்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இதன் மேற்புற வடிவமைப்பு, உள் பகுதியில் சிறப்பம்சங்கள் கொண்டதாக இது இருக்கும். இதன் விலை 6 லட்சம் டாலராகும். அடுத்தாக 4 லட்சம் டாலரில் வழக்கமான மாடல் பறக்கும் கார்களைத் தயாரிக்கப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று சக்கரங்களைக் கொண்டதாக தயாரிக்கப்பட்ட இந்த காரில் இரண்டு பேர் பயணிக்கலாம். சாலையில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும். 9 விநாடிகளில் அதிகபட்ச வேகத்தை இந்த கார் தொடும். வானில் பறக்கும்போது இதன் வேகம் மணிக்கு 180 கி.மீ. ஆக இருக்கும். இதன் பெட்ரோல் டாங்கை நிரப்பினால் சாலையில் 1,314 கி.மீ. தூரம் பயணிக்க முடியும். வானில் பறப்பதாயிருந்தால் 500 கி.மீ. தூரத்தைக் கடந்து செல்லலாம். 2009-ம் ஆண்டிலிருந்தே இந்த காரை சோதித்துப்பார்க்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த பறக்கும் காரை வாங்க விரும்புவோர் சாதாரண மாடலுக்கு 10 ஆயிரம் டாலரும், உயர் ரக மாடலுக்கு 25 ஆயிரம் டாலரும் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இந்த பறக்கும் காரை வாங்க விரும்புவோர் சாதாரண மாடலுக்கு 10 ஆயிரம் டாலரும், உயர் ரக மாடலுக்கு 25 ஆயிரம் டாலரும் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். சாலையில் செல்லும்போது இதன் இறக்கைகளை மடக்கி வைத்துச் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பறக்க வேண்டிய சமயத்தில் 10 நிமிஷத்தில் இதை மாற்ற முடியும்.
இந்த காரை செயல்படுத்த பைலட் லைசென்ஸ் அவசியம். இருப்பினும் கைரோகாப்டர் லைசென்ஸ் இருந்தால் போதும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்பஸ் நிறுவனமும் இதுபோன்ற பறக்கும் கார்களைத் தயாரிக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிரைவர் தேவைப்படாத கார் தயா ரிப்பு வரிசையில் தற்போது பறக்கும் கார் விண்ணில் பறக்க வருகிறது. வானம் தொட்டு விடும் தூரம்தான்!