

மனித இனத்தின் வளர்ச்சியை நாகரிகக் கட்டத்துக்கு நகர்த்திய உலோகங்களில் முக்கியமானது இரும்பு. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை இரும்பு காலம் என்றே குறிப்பிடுகின்றனர். பூமியில் இரும்புத்தாது அதிகமாக உள்ளது. அதிக வெப்பத்தைக் தாக்கும் திறன், உறுதித் தன்மை கொண்டிருப்பதால் தொழில்துறை தேவைகளில் முதலிடத்தில் உள்ளது.
# பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் இரும்பு தாதுவை பிரித்து தேனிரும்பு, எஃகு இரும்பு என பிரித்தெடுக்கப்படுகிறது.
வேதியியல் குறியீடு : Fe
இந்திய இரும்பு உற்பத்தியில் முதலிடம்
அரசு நிறுவனம் : செயில்
தனியார் நிறுவனம்: டாடா ஸ்டீல்
கச்சா இரும்பு உற்பத்தியில் பங்கு (சதவிதத்தில்)
செயில் : 15.8
டாடா ஸ்டீல் : 11.03
வைஸாக் ஸ்டீல் : 4.08
இதர நிறுவனங்கள்: 69.09
பயன்படுத்தத் தக்க உருக்கு உற்பத்தியில் பங்கு (சதவிதத்தில்)
செயில் : 13
டாடா ஸ்டீல் 10.33
வைஸாக் ஸ்டீல் : 3.73
இதர நிறுவனங்கள் : 72.94
# கச்சா இரும்பு உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவின் இடம் : 3
# 2016-ம் ஆண்டில் இறுதியில் 2-வது இடத்துக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இரண்டாவது இடத்தில் இருக்கும்.
# 2003-ம் ஆண்டில் 8 வது இடத்தில் இருந்தது.
# உலக அளவிலான உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 5.5 சதவீதம்
# ஆண்டுக்கு 140 மில்லியன் டன் உற்பத்தி
# இந்திய உற்பத்தி துறையில் குறியீட்டில் உருக்கு உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கேபிடல் குட்ஸ் மற்றும் கட்டுமான துறை வளர்ச்சியை பொறுத்து உருக்கு துறை வளர்ச்சி அமைகிறது.
# இந்திய ஜிடிபியில் பங்கு 2 %
# மறைமுக நேரடி வேலைவாய்ப்புகள் : 6 லட்சம்
# இந்திய இரும்பு உற்பத்தி ஆண்டு வளர்ச்சி 7.6 சதவீதம்.
# 2016-ம் ஆண்டு உற்பத்தி 9.06 கோடி டன்
# 2025-ம் ஆண்டுகளில் மொத்த உற்பத்தி 30 கோடி டன்னாக இருக்கும்.
இறக்குமதி
ஆண்டு சராசரி 4.3 %
2013 - 7.93 மில்லியன் டன்
2014 - 5.45 மில்லியன் டன்
2015 - 9.32 மில்லியன் டன்
2016 - 8.39 மில்லியன் டன்
ஏற்றுமதி
வளர்ச்சி 3.4 %
2013- 5.37 மில்லியன் டன்
2014 - 5.98 மில்லியன் டன்
2015 -5.59 மில்லியன் டன்
2016 - 2.91 மில்லியன் டன்
# 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதி
# ஏப்ரல் 2006-ம் ஆண்டு முதல் மார்ச் 2016 வரை உலோகத்துறையில் 889 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாடு துறை கூறியுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
செயில்
டாடா ஸ்டீல்
உத்தம் காவ்லா மெட்டாலிக்ஸ்
ஜே எஸ் டபிள்யூ குழுமம்
என் எம் டி சி
வேதாந்தா ரிசோர்ஸ்
பஜாஜ் ஸ்டீல் இன்டஸ்ட்ரீஸ்
விசா ஸ்டீல்
எம் எஸ் பி குழுமம்
வைஸாக் ஸ்டீல்
பால்கோ
புஷான் பவர் அண்ட் ஸ்டீல் :
உலக அளவில் மிகப் பெரிய உருக்கு நிறுவனம்
ஆர்செலர் மிட்டல்
தேவைகள்
பாலம் கட்டுதல், ரயில் தண்டவாளம், கப்பல் கட்டுதல், மின்னுற்பத்தி ஆலைகள், வாகன உற்பத்தி, கட்டுமான துறை.
கட்டுமான துறை 35%
உள்கட்டமைப்பு துறை : 20
ஆட்டோமொபைல் : 12
பைப்ஸ் அண்ட் டியூப்ஸ் : 10
கேபிடல் குட்ஸ் : 8
இதர துறை : 15
# ஆன்லைன் மூலம் உருக்கு விற்பனைக்காக மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்ப்பரேஷன் நிறுவனமும் உருக்கு அமைச்சகமும் இணைந்து எம்எஸ்டிசி மெட்டல் மண்டி என ஆன்லைன் சந்தையை தொடங்கியுள்ளது.
# ஏலத்தில் எடுத்த சுரங்க லைசென்ஸை மாற்றிக் கொள்வது, நிறுவனங்களின் இணைப்பு, கையகப்படுத்துதல் போன்றவற்றை சுரங்க மற்றும் கனிம மேம்பாடு துறை ஒழுங்குமுறையின் கீழ் வருகின்றன.
செயில்
# செயில் நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி 13 மில்லியன் டன். இதை 23 மில்லியன் டன்னாக அதிகரிக்க உள்ளது. இதற்காக 9.6 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது.
# 2025ம் ஆண்டுக்குள் 50 மில்லிடன் டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 23.8 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.
# உருக்கு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துக்காக தனியாக நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 33 மில்லியன் டாலர்.
# பயன்படுத்தத் தக்க உருக்கு தனிநபர் பயன்பாட்டு அளவு இந்தியாவில் 217 கிலோ. சீனாவில் 510 கிலோ.
ஆண்டு நுகர்வு
# *2016-17 : 58.94 மில்லியன் டன்
# 2015-16 : 76.99 மில்லிடன் டன்
# 2014-15 : 74.01 மில்லியன் டன்
# 2013-14 : 73.5 மில்லியன் டன்
# 2012-13 : 71 மில்லியன் டன்
# 2011-12 : 66.4 மில்லியன் டன்
*ஏப்ரல்- டிசம்பர் 2016
உருக்கு உற்பத்தியில் மாநிலங்களின் பங்கு (சதவிதத்தில்)
ராஜஸ்தான் : 11.93
ஒடிசா : 11.49
ஜார்கண்ட் : 9.05
குஜராத் : 7.73
மத்திய பிரதேசம் : 6.21
தெலங்கானா : 6.19
சத்தீஸ்கர் : 5.22
மஹாராஷ்டிரா : 4.33
அஸாம்: 3.75
ஆந்திரப் பிரதேசம்: 3.01
இதர மாநிலங்கள் : 10.88
கடல் கடந்த பிரதேசங்கள் : 20.20
கச்சா உருக்கு உற்பத்தியில் நாடுகளின் பங்கு பங்கு (சதவிதத்தில்)
சீனா : 49.6
ஜப்பான் : 6.5
இந்தியா : 5.5
அமெரிக்கா : 4.9
ருஷியா : 4.4
இதர நாடுகள் : 29.2