ஹெச் 1 பி விசா

ஹெச் 1 பி விசா
Updated on
2 min read

உலகம் முழுவதிலும் ஐடி உள்ளிட்ட உயர்கல்வி படித்த, படிக்கும் இளைஞர்களின் கனவு அமெரிக்கா. காரணம் அமெரிக்காவில் திறமையாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் உள்ளதுதான். நிதிச் சேவை, ஐடி, பொழுதுபோக்கு என உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்வது அவ்வளவு எளிதல்ல. திறமையானவர்கள் மட்டுமே அந்நாட்டுக்குள் நுழைய முடியும். அந்தவகையில் கிட்டத்தட்ட அதிக திறமை கொண்டவர்களின் நாடு என்றும் அமெரிக்காவை குறிப்பிடலாம். அப்படியான திறன் மிகு பணியாளர்களுக்கு அனுமதியளிக்கும் தற்காலிக குடியுரிமை ஹெச் 1 பி விசா.

தகுதி

# நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை அழைக்க இந்த விசா அனுமதிக்கிறது. அமெரிக்க தொழிலாளர் துறை இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தனிநபர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.

# பேஷன், ஐடி, நிதிச்சேவை, கணக்கியல், கட்டுமான வடிவமைப்பு, பொறியியல், கணக்கு, அறிவியல், மருத்துவம் என எல்லா துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்த விசாவில் செல்லலாம்.

# உயர் கல்வி முடித்திருக்க வேண்டும். பட்டம் இல்லையென்றால் அதற்கு இணையாக வேலை அனுபவச் சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.

எத்தனை ஆண்டுகள் செல்லும்

# 6 ஆண்டுகள் செல்லும்

# முதல் 3 ஆண்டுகள் முதற்கட்ட அனுமதியும் அதற்கு பிறகு தேவைக்கு ஏற்ப மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும்.

# அமெரிக்காவில் இடம் வாங்கலாம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

# குடியேற்ற விதிமுறைபடி ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 85,000 விசா அனுமதிக்கப்படும். இதில் 65,000 பேர் குறைந்தபட்ச பட்டம் கொண்ட தனிதிறமை கொண்டவர்களுக்கும், 20,000 பேர் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு படித்தவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. இந்த விசா மூலம் செல்பவர்கள் அதிகரித்ததால், 2018 முதல் கணினி குலுக்கல் முறையில் விசா விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in