வெற்றி மொழி: மால்கம் எக்ஸ்

வெற்றி மொழி: மால்கம் எக்ஸ்
Updated on
1 min read

1925ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த மால்கம் லிட்டில் என்ற இயற்பெயருடைய மால்கம் எக்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் மனித உரிமை ஆர்வலர். சிறு வயதிலேயே அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டு பின் அதற்கெதிராகப் போராடத் தொடங்கினார். தனது சிறந்த பேச்சாற்றலின் மூலமாக அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். வரலாற்று சிறப்புமிக்க பல உரைகள் இவரால் நிகழ்த்தப்பட்டு அதன்மூலம் பல்வேறு தரப்பினரையும் தன்பால் ஈர்த்தவர். வரலாற்றில் மிக உயரிய மற்றும் அதிக செல்வாக்குடைய ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

# நமது எதிர்காலத்திற்கான பாஸ்போர்ட் கல்வியே.

# இடறிவிழுவது என்பது வீழ்ச்சியாகி விடாது.

# சுதந்திரம், சமத்துவம், நீதி அல்லது எதையும் யாரும் உங்களுக்கு கொடுக்க முடியாது. உண்மையில் அது உங்களுக்கு வேண்டுமென்றால், நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.

# ஒரு மனிதனின் மொத்த வாழ்வையும் ஒரு புத்தகத்தின் மூலம் மாற்றமுடியும் என்பதை மக்கள் உணர்வதில்லை.

# ஒருமுறை குற்றவாளியாக இருந்ததில் எந்த அவமானமும் இல்லை. தொடர்ந்து குற்றவாளியாக நீடிப்பதே அவமானம்.

# நாளைய வாழ்விற்காக இன்றே ஆயத்தமாக இருப்பவருக்கே எதிர்காலம் சொந்தமானது.

# தூரத்தை விட நேரம் எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in