

சொகுசு கார் தயாரிப்பில் முன் னணியில் உள்ள ஜெர் மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் பேட்டரி கார்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து முடிந்த கண்காட்சியில் இந்நிறுவனத்தின் பேட்டரி கார் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆடி இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் கார், சீன சந்தையைக் குறிவைத்து வடி வமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ஷாங்காய் கண்காட்சியில் இதை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதில் ஆடி நிறுவனம் தீவிரமாக இருந்தது.
சீனாவில் பேட்டரி கார்களை ஊக்குவிப்பதற்காக அங்கு 1.5 லட்சம் பேட்டரி சார்ஜிங் மையங்கள் உள்ளன. மேலும் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.
பேட்டரி கார்களுக்கு வளமான எதிர்காலம் மற்றும் சீன அரசு அளிக்கும் சலுகைகளை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவும் ஆடி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
ஐந்து மாடல்களில் பேட்டரி கார்களை தயாரித்து சீனாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழுவதும் பேட்டரியில் இயங்கக் கூடிய ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் ஓடும் வகையிலான ஒரு மாடல் இதில் அடங்கும் என்று ஆடி நிறுவன இயக்குநர் குழு உறுப்பினர் டாக்டர் டெய்ட்மர் ஊகன்ரெட்டர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காரில் உள்ள விளக்குகள் பகல், இரவு ஆகிய இரு நேரங்களிலும் தெளிவாகத் தெரியும் வகையில் புதிய நுட்பத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் டிஜிட்டல் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த காரை அடையாளப்படுத்தும் நான்கு வளையங்களில் எல்இடி விளக்கு தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது.
இந்த காரின் பக்கவாட்டுப் பகுதியில் சக்கரங்களுக்கான வளைவு, நிறுவனத்தின் குவாட்ரோ தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சக்கரங்கள் 23 அங்குலமும், வெளிப்புற நீளம் 4.90 மீட்டர் கொண்டதாகவும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகலம் 1.98 மீட்டராகும்.
இந்த கார் அடுத்த ஆண்டில் விற் பனைக்கு வரும் என்று நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் தெரி வித்துள்ளார். அடுத்த தலைமுறையின் சிறந்த பேட்டரி வாகனமாக இது இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த காரின் முன்பக்க ஆக்ஸிலில் ஒரு மோட்டாரும், பின்பகுதி ஆக்ஸிலில் இரு மோட்டாரும் உள்ளன. 320 கிலோவாட் திறன் கொண்ட இந்த கார் உயர் வேகத்தில் 370 கிலோவாட் திறனை எட்டும். ஒரு மணி நேரத்துக்கு 95 கிலோவாட் திறனை வெளிப்படுத்துவதாக இதன் பேட்டரி இருக்கும்.
சொகுசான பயணத்தை உறுதி செய்யும் ஆடி நிறுவனத்தின் பேட்டரி காரும் அதை நிச்சயம் அளிக்கும் என்று நம்பலாம்.