ஸ்மார்ட் கார்கள்!

ஸ்மார்ட் கார்கள்!
Updated on
2 min read

பெரும்பாலானவர்களுக்கு தங்களது ஸ்மார்ட்போனை எந்த அளவுக்கு தங்களது தினசரி பயன்பாட்டில் உபயோகமாக பயன்படுத்திக் கொள்வது என்பது தெரிவதில்லை. ஆனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதற் காகக் காத்திருப்பதில்லை. தங்களது வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவுக்கு உபயோகமான தகவல்களை அளிக்கலாம் என்று யோசித்து தொழில் நுட்ப உதவியோடு அதை அளிக்கின்றன.

லாஸ்வேகாஸில் சமீபத்தில் நடந்து முடிந்த மின்னணு கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம் காட்சிப்படுத்தி யிருந்த ஸ்மார்ட் கார் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.

சுங்கக் கட்டணம், சாலையோர உணவு விடுதியில் சாப்பிடும்போது அதற்குரிய தொகை, கார் நிறுத்துவதற்கான கட்டணம் அனைத்தையும் இந்த கார் செலுத்திவிடும். அதாவது வாடிக்கை யாளரின் வங்கி கடன் அட்டையிலிருந்து இந்த பரிவர்த்தனையை அதுவாக மேற்கொண்டு விடும். அந்த அளவுக்கு இது ஸ்மார்ட்டாக செயல்படும். அதே போல பெட்ரோல் நிரப்பினால் அதற்கான தொகையையும் இது செலுத்திவிடும்.

இத்தகைய வசதியை இந்த ஆண்டே தங்களது கார்களில் அறிமுகம் செய்யப் போவதாக ஜெனரல் மோட்டார்ஸ், கொரி யாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறு வனங்கள் அறிவித்துள்ளன. பார்க்கிங் கட்டணத்தை செலுத்தும் வசதியை தனது கார்களில் அறிமுகப்படுத்த ஃபோக்ஸ் வேகன் தீவிரம் காட்டி வருகிறது.

பொதுவாக அமெரிக்கர்கள் தினசரி 50 நிமிஷம் வரை காரில் பயணிக்கின்றனர். பயணத்தின்போது சுங்கக் கட்டணம், சாலையோர விடுதிகளில் உணவு சாப் பிடுவது உள்ளிட்டவற்றில் கணிசமான நேரம் செலவிடுகின்றனர். இதற்குரிய கட்டணத்தை பணமில்லா வர்த்தக முறையில் செலுத்த காரில் உள்ள ஸ்மார்ட் கருவி உதவும்.

அனைத்து கார் தயாரிப்பாளர்களும் இத்தகைய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக பண பரிவர்த்தனை நிறுவனங்களோடு கூட்டு சேர்வது தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசா, மாஸ்டர் கார்டு ஆகிய நிறுவனங்களோடு கூட்டு சேர ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பேச்சு நடத்தி வருகின்றன.

காரில் உள்ள செயற்கைக்கோள் இணைப்பு வசதி, செல்போன், வைஃபை மற்றும் புளூடூத் இணைப்பு மூலம் இத்தகைய வசதிகளை அளிக்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. சர்வதேச அளவில் கார் களில் உள்ள செல்போன் மூலமான இணைப்பு 6 கோடி கார் வாடிக்கை யாளர்களிடம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 4 கோடியாக இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த கண்காட்சியில் ஜென்டெக்ஸ் கார்ப் நிறுவனம் புதிய தொழில்நுட்பத் தோடு பின்புற வாகனங்களைக் கண்டறியும் கண்ணாடிகளை காட்சிப்படுத்தியிருந்தது. கார் ஓட்டுபவரின் கண்ணின் தன்மையை அடையாளம் கொண்டு உரிமையாளரா இல்லையா என்பதை உணர்ந்துகொள்ளும். இத்தகைய கண் ணாடிகள் அடுத்த ஆண்டு அனைத்து கார்களிடும் இடம்பெறலாம் என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு 20 லட்சம் கார்களில் ஆன்ஸ்டார் கோ ஆப் என்ற செயலியைக் கொண்டுள்ளதாக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கார் டிரைவர்கள் டிஜிட்டல் வாலட் மூலம் சுங்கக் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த முடியும்.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன ஓட்டிகள் பதிவிறக்கம் செய்யும் வகையி லான செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி கிரெடிட் கார்டுடன் இணைக்கப்படும். வங்கி அட்டை குறித்த தகவல் காரின் டேஷ் போர்டில் ஒளிரும். இதனால் வாடிக்கையாளர்கள் பயணத்தின் போது தங்களது ஸ்மார்ட்போனை எடுத்து பயன் படுத்தவேண்டிய தேவையிருக்காது.

எதிர்வரும் ஸ்மார்ட் கார்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in