

உலகம் முழுவதும் அதிக வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய துறையாக சில்லரை வர்த்தகம் உள்ளது. சிறிய சாலைக் கடைகள் முதல் மிகப்பெரிய ஹைப்பர் மார்க்கெட்டுகள்வரையில் சர்வதேச அளவில் மிகப் பெரிய சந்தை இது. அதேபோல் சங்கிலித்தொடர் சில்லரை வர்த்தக நிறுவனங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. சிறு நகரங்களில்கூட சூப்பர் மார்க்கெட்டுகள் சென்றடைந்துள்ளன. குறிப்பாக இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சில்லரை வர்த்தகத் துறை வரும் காலங்களில் மிகப் பெரிய வளர்ச்சியடையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சர்வதேச அளவில் சில்லரை வர்த்தகத் துறை பற்றி சில தகவல்கள்…