புதிய தொழில்நுட்பத்தில் ஐஷர் டிரக்குகள்

புதிய தொழில்நுட்பத்தில் ஐஷர் டிரக்குகள்
Updated on
1 min read

ஆடை, அணிகலனுக்கு அடுத்தபடி யாக அதிக இடைவெளியில் புதிய தயாரிப்புகள் சந்தையில் முற்றுகையிட்டவண்ணமிருப்பது ஸ்மார்ட் போன்கள். இதற்கு அடுத்தபடியாக புதிய வரவுகளின் களமாக இருப்பது ஆட்டோமொபைல் துறைதான்.

பெருகிவரும் ஆட்டோமொபைல் சந்தையின் வேகத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள புதிய தயாரிப்பு களை, மேம்பட்ட தொழில்நுட்பத் தோடு நிறுவனங்களும் அடிக்கடி அறி முகப்படுத்திக் கொண்டே வருகின்றன.

அந்த வரிசையில் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம் அதிக எரிபொருள் சிக்கனமான டிரக்குகளை (லாரி) அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதில் ஹெக்ஸா டிரைவ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எய்ஷர் புரோ 1110 மற்றும் 1110 எக்ஸ்பி என்ற இரண்டு மாடல்களில் இவை விற்பனைக்கு வந்துள்ளன. அதிவேக செயல்திறன், ஆயுள்கால லாபம் என்ற கோஷத்தோடு இவ்விரு மாடல்களை சந்தையில் களமிறக்கியுள்ளது ஐஷர் மோட் டார்ஸ்.

ஏஎப்சி எனப்படும் முன்னேறிய எரி பொருள் கம்பஸ்டன் இன்ஜின் தொழில் நுட்பம் உள்ளதால் இது எரிபொருள் சிக்கனமானது. மற்றும் ஹெக்ஸா டிரைவ் தொழில்நுட்பம் வாகனத்தை இயக்குவதை எளிதாக்கியுள்ளது. சுழற்சி நேரத்தை மிகவும் குறைத்து இன்ஜினின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ஹெக்ஸா டிரைவ் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறு ஸ்பீடு ஓவர்டிரைவ் கியர் பாக்ஸ் உள்ளது. இது சக்கரத்துக்கு அதிக சுழல்திறனை அளிக்கிறது. அதிக கியர் விகிதங்களால் இந்த டிரக்குகள் அதிக வேகத்தில் இயங்குவதுடன் எரிபொருளும் மிகவும் சிக்கனமாக பயன்படுத்தப்படு கிறது.

இன்ஜினின் எரிபொருள் உந்து சக்தி யாக மாற்றப்படும் பகுதியான கம்பஸ் டன் அறை மிக வித்தியாசமாக வடிவமைக் கப்பட்டுள்ளது. மேலும் இதில் பியூயல் இன்ஜெக் ஷன் நுட்பம் குறைவான எரிபொருள் மூலம் அதிக செயல்திறனை அளிக்க வகை செய்துள்ளது. அத்துடன் அதிக இழுவை திறன் கொண்டதாக இந்த டிரக்குகள் விளங்குகின்றன.

115 ஹெச்பி திறன் மற்றும் 400 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் பிஎஸ் 3 பிரிவில் இவை வெளிவந்துள்ளன.

இன்ஜினின் செயல்திறனுக்கு உறுதி யளிக்கும் வகையில் பராமரிப்பு இடைவெளி 50 ஆயிரம் கிலோ மீட்டராக உள்ளது.

டிரக்குகளைப் பொறுத்தமட்டில் அதிக செயல்திறன், எரிபொருள் சிக்கனமான வாகனங்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு. அந்த வகையில் ஐஷர் தயாரிப்புகள் சந்தையின் விரும்பத்தக்க டிரக்காக மாறும் என எதிர்பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in