வெற்றி மொழி: பிரெடரிக் நீட்சே

வெற்றி மொழி: பிரெடரிக் நீட்சே
Updated on
1 min read

1844 ஆம் ஆண்டு முதல் 1900 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த பிரெடரிக் நீட்சே பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபலமான ஜெர்மானிய தத்துவவாதி, கவிஞர் மற்றும் கலாசார விமர்சகர். மதம், கவிதை, தத்துவ எதிர்வாதம், விமர்சனம், அறிவியல் மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றில் படைப்புகளை கொடுத்துள்ளார். இவரது படைப்புகள் நவீன அறிவார்ந்த வரலாறு மற்றும் மேற்கத்திய தத்துவத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் பல முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களிடம் இவரது எழுத்துகளின் தாக்கம் இருந்தது.

எப்போதும் அன்பில் சில பைத்தியக்காரத்தனம் உண்டு. ஆனால், அந்த பைத்தியக்காரத்தனத்திற்கான காரணமும் எப்போதும் உண்டு.

ஒவ்வொரு உண்மையான மனிதனுக்குள்ளும் விளையாட்டில் விருப்பமுள்ள ஒரு குழந்தை மறைந்துள்ளது.

நமது உணர்வுகளின் நிழல்களே எண்ணங்கள். அவை எப்போதும் இருண்ட, வெறுமையான மற்றும் எளிமையானதாக உள்ளன.

இசை இல்லாமல், வாழ்க்கை தவறானதாகிவிடும்.

உண்மைகள் என்று எதுவுமில்லை, விளக்கங்கள் மட்டுமே உள்ளன.

பொய் என்பது வாழ்க்கையின் ஒரு நிபந்தனையாக உள்ளது.

ஒரு எதிரிக்கு எதிரான சிறந்த ஆயுதம், மற்றொரு எதிரியே.

கடந்த காலத்தைப் போலவே எதிர்காலமும் நிகழ்காலத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

உங்களது ஆழ்ந்த தத்துவத்தில் உள்ளதைவிட, உங்கள் உடலில் அதிக ஞானம் உள்ளது.

மன்னிப்பதற்கு ஏதாவது இருந்தால், அங்கே கண்டிப்பதற்கும் ஏதாவது ஒன்று இருக்கும்.

ஏன் என்பது உங்களுக்கு தெரியுமானால், உங்களால் எப்படியாயினும் வாழ முடியும்.

அனைத்து அழகிய கலை மற்றும் அனைத்து உயர்ந்த கலை ஆகியவற்றின் சாராம்சமாக நன்றி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in