மின்னணு கழிவு

மின்னணு கழிவு
Updated on
2 min read

சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மின்னணு கழிவு. ஆண்டுக்காண்டு சேர்ந்து கொண்டிருக்கும் மின்னணு கழிவுகளை அகற்றுவது மிகப் பெரிய சவாலான பணியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அபாயகரமான இந்த கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு முயற்சிகள் நடந்தாலும், அதன் தேக்கத்தால் உருவாகும் சூழலியல் பிரச்சினைகள் முக்கிய விவாத பொருளாகவே உள்ளன. அது குறித்த ஒரு பார்வை

# வீட்டு உபயோகப் பொருட்கள், பொழுதுபோக்கு மற்றும் நுகர்வோர் சாதனங்கள், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட துரைகளிலிருந்து அதிக மின்னணு கழிவுகள் உருவாகின்றன.

# கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், ரெப்ரெஜிரேட்டர், வாஷிங் மெஷின், டிரையர், ஹோம் தியேட்டர், பேட்டரி பொம்மைகள் ,

# சர்வதேச அளவில் 2020-ம் ஆண்டுக்குள் மின்னணு கழிவு மேலாண்மை சந்தையின் மதிப்பு 504 கோடி டாலராக இருக்கும். 2014-ம் ஆண்டில் இது 166 கோடி டாலராக இருந்தது.

# 2015 ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு வரையிலான வளர்ச்சி வீத எதிர்பார்ப்பு 20.6 சதவீதம்

# மின்னணு கழிவுகளிலிருந்து பல உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இரும்பு, இரும்பு அல்லாத பொருட்கள், பிளாஸ்டிக், கண்ணாடிகள், மரத்துண்டு, செராமிக் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

மின்னணு கழிவுகளை மறு சுழற்சி செய்வதில், சர்வதேச அளவிலான முக்கிய பெரிய நிறுவனங்கள்

> அரபிஸ் ஏஜி (Aurubis AG) ஜெர்மனி

> பாலிடன் ஏபி (Boliden AB) ஸ்வீடன்

> எம்பிஏ பாலிமர்ஸ் (MBA Polymers) கலிபோர்னியா

> எலெக்ட்ரானிக்ஸ் ரீசைக்கிளர்ஸ் இனடர்நேஷ்னல் அமெரிக்கா

> சிம்ஸ் மெட்டல் மேனேஜ்மெண்ட் ஆஸ்திரேலியா

> உமிகோர் எஸ்.ஏ (Umicore S.A. ) பெல்ஜியம்

> டெர்ரோனிக்ஸ் இண்டர்நேஷ்னல் இங்கிலாந்து

> என்விரோ-ஹப் ஹோல்டிங்ஸ் - சிங்கப்பூர்

> குளோபல் எலெக்ட்ரானிக் பிராசசிங் கனடா

# இ-வேஸ்ட் உருவாக்கத்தில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது.

# அதிக மின்னணு கழிவுகள் உருவாகும் நாடுகளில் இந்தியாவின் இடம் 5

# மின்னணு கழிவுகளின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது.

# உலக அளவில் ஆண்டுதோறும் 2 கோடி டன் முதல் 5 கோடி டன் வரையில் மின்னணு கழிவுகள் உருவாகின்றன.

# இந்தியாவில் ஆண்டுதோறும் உருவாகும் மின்னணு கழிவுகளின் அளவு 17 லட்சம் டன். 2012ம் ஆண்டில் இது 8 லட்சம் டன்னாக இருந்தது.

# உலக அளவிலான இ-வேஸ்டில் இந்தியாவின் பங்கு 4 சதவீதம். உலக அளவிலான ஜிடிபியில் 2.5 சதவீதம்

# வளர்ந்த நாடுகள் தங்களின் மின்னணு கழிவுகளை வளரும் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தொழில் வாய்ப்புகள் என்கிற பெயரில் ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவும் மிகப் பெரிய அளவில் மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்கிறது.

# கர்நாடகாவைச் சேர்ந்த செரிபரா நிறுவனம் (cerebra computers) ஆண்டுக்கு 36,000 டன் மின்னணு கழிவுகளை மறு சுழற்சி செய்யும் ஆலையை வைத்துள்ளது.

# உலக அளவில் நகரங்களின் திடக்கழிவில் மின்னணு கழிவின் பங்கு 5 சதவீதம். இதர கழிவுகளை விடவும் இவை அபாயகரமாவை.

# வளர்ந்த நாடுகளில், அடுத்த 5 ஆண்டுகளில் இதர கழிவுகளை விட மின்னணு கழிவு வளர்ச்சி 3 மடங்கு அதிகரிக்கும்.

# மின்னணு கழிவில் பெரும்பான்மை வகிப்பது கம்யூட்டர், செல்போன்.

# இந்தியாவில் 70 சதவீத மின்னணு கழிவுகள் எரிக்கப்படுகிறன அல்லது புதைக்கபடுகின்றன.

# மின்னணு கழிவுகளை புதைக்கிறபோது நிலத்தடி நீர் வளமும், மீத்தேன் வாயுவும் குறைகின்றன. எரிக்கிறபோது 25 மடங்கு அதிகமான கார்பன் டையாக்ஸைட் வெளிப்படுகிறது.

# இந்தியாவில் மின்னணு கழிவுகளை கையாளும் வேலைகளில் 25,000 பேர் ஈடுபடுகின்றனர். கழிகளை சேகரிப்பது, உலோகங்களை பிரிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்கின்றனர். இது அபாயகரமான வேலை என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.

# நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, கானா, நாடுகள் அதிக அளவில் மின்னணு கழிவுகளை கையாளுகின்றன.

# ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு வாடிக்கையாளரும் மின்னணு கழிவுகளின் மறு சுழற்சிக்கு தொகையை அளிக்க வேண்டும். இதனால் மறு சுழற்ச்சிகான செலவு சுமையாக இருக்காது - இதைச் சொன்னவர் அறிவியல் மற்றும் சுற்று சூழலுக்கான மைய இயக்குநர் சுனிதா நாராயணன்


சுனிதா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in