

ஐ-போன் தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் ஆப்பிள் நிறுவனம் தற்போது டிரைவர் தேவைப்படாத கார்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
அடுத்த தலைமுறை கார்கள், அதாவது டிரைவர் தேவைப்படாத தானியங்கி முறையில் செயல்படும் கார் உருவாக்கத்தில் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இத்தகைய கார் உருவாக்கத்தில் கூகுள் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த வரிசையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் தடம் பதிக்க உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் உறுதி செய்துள்ளார்.
டிரைவர் தேவைப்படாத தானியங்கி கார் உருவாக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் மிகுந்த கால தாமதமாக நுழைகிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இருப்பினும் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இத்தகைய காரை கலிபோர்னியா மாகாணத்தில் சோதித்து பார்ப்பதற்கான அனுமதியை பெற்றுவிட்டது.
இத்திட்டப் பணியை செயல்படுத்துவதற்காக 12-க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்களையும் பணியமர்த்தியுள்ளது இந்நிறுவனம்.
இத்திட்டப் பணிக்கு `டைட்டன்’ என பெயர் சூட்டியுள்ளது ஆப்பிள். கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 3 எஸ்யுவி-க்களை ஆப்பிள் நிறுவனம் சோதித்து பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனை ஓட்டத்தில் மொத்தம் 6 கார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியா மாகாணத்தின் முக்கிய சாலைகள் மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரின் கடலோர சாலைகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை ஓட்டத்தில் மிக முக்கியமான பிரச்சினைகளை இந்நிறுவனம் எதிர்கொண்டதாகத் தெரிகிறது. அதற்குத் தீர்வு காணும்முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் பிறகேமுழுமையாக களமிறங்கும் என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாகபேட்டரியில் இயங்கும் காரைகளமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச அளவில் ஆப்பிள் தயாரிப்புகள் மிகவும் பிரசித்தம். டிரைவர் தேவைப்படாத கார் அதிலும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத காருக்கு இதேஅளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது அது நடத்தும் சோதனை ஓட்டத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம்.