

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங்களை உற்பத்தி செய்யும் அதே நேரம் சூழல் பாதிப்பில்லா மின்னுற்பத்தியிலும் கவனம் செலுத்துகிறது டொயோடா.
இந்நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை பெங்களூருவில் உள்ள பிடாடி எனுமிடத்தில் உள்ளது. இந்த ஆலையில் 100 கிலோவாட் மின்சாரம் சூரிய ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது.
ஆலையின் மேற்கூரை முழுவதும் சூரிய தகடுகள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த பணியை டாடா பவர் நிறுவனம் மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றித் தந்துள்ளது.
இந்த சூரிய மின் தகடுகள் மூன்றே வாரத்தில் அதாவது 21 நாள்களில் பொறுத்தப்பட்டு மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது மற்றொரு சாதனை நிகழ்வாகும்.
இந்த சூரியமின் தகடுகள் 1.46 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 117 டன் கரியமில வாயு வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
சூழல் பாதிப்பில்லா மின்னுற்பத்திக்கு மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வழிகாட்டுகிறது டொயோடா.