இந்திய சிஇஓ

இந்திய சிஇஓ
Updated on
1 min read

சர்வதேச அளவிலான நிறுவனங்களின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைமைச் செயல் அதிகாரிகளில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என்கிறது ஆய்வு ஒன்று. இங்குள்ள திறன் வாய்ந்த கல்வி, பணிகளை விரும்பி ஏற்பது மற்றும் பணிக்கு ஏற்ப பொருந்திச் செல்வது போன்ற காரணங்களால் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு செல்வது அதிகமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

குறிப்பாக ஆசிய பசிபிக் நாடுகள் அளவில் சர்வதேச நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் சுமார் 27% இந்தியர்கள் உள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களில் சுமார் 50% பேர் இந்தியர்களாக உள்ளனர் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் சிஇஓ விவரம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in